ஈரான் வைத்த கண்ணிவெடி.. தோண்டி எடுக்க கிளம்பும் ஜெர்மனியின் Fulda - Mosel..!

Subscribe to Oneindia Tamil

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை, கடந்த சில மாதங்களாக அமெரிக்கா - ஈரான் மோதலால் மொத்தமாக முடங்கி இருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக கடல் போக்குவரத்தை மீண்டும் பாதுகாப்பாக மாற்றும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், ஜெர்மனி தனது கடற்படை கப்பல்களை ஹார்முஸ் நீரிணை நோக்கி நகர்த்தத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் போர் காலத்தில் ஈரான் கடற்படை கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் சர்வதேச நடவடிக்கைக்கு தயாராகும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

Germany mine hunter Hormuz

கண்ணிவெடி அகற்றும் கப்பல்களுடன் ஜெர்மனி தயார்

ஜெர்மனி பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் வெளியிட்ட தகவலின்படி, 'Fulda' என்ற மைன்-ஹண்டர் கப்பலும், 'Mosel' என்ற சப்போர்ட் கப்பலும் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடல் பகுதியை நோக்கி பயணித்து வருகின்றன.

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அகற்றும் சர்வதேச நடவடிக்கைக்கு அனுமதி கிடைத்தால் உடனடியாக செயல்படுவதற்கான ஜெர்மனி கப்பல் தற்போது ஹார்முஸ் பகுதிக்கு தனது பயணத்தை துவங்கியுள்ளது.

ஜெர்மனியின் கடற்படை, நேட்டோ நாடுகளில் கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த படையாகக் கருதப்படுகிறது. இந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் சுரங்க அகற்றும் பணியில் ஜெர்மனி பங்கேற்க தயாராகி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான சமீபத்திய அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, உலகின் கவனம் தற்போது ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பதிலேயே உள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கியமான இந்த கடல் பாதை வழியாக வளைகுடா நாடுகளிலிருந்து பெருமளவு எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுகிறது. போர் காரணமாக பல மாதங்களாக பாதிக்கப்பட்ட இந்த வழித்தடம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தால், உலக எரிசக்தி சந்தையில் பழைய விலைக்கு திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே எரிபொருள் விலை 4 டாலருக்கு கீழ் குறைந்துள்ளது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, வளைகுடா பிராந்தியத்தில் இருந்து ஏற்றுமதிக்காக காத்திருக்கும் கச்சா எண்ணெயின் அளவு 160 மில்லியன் பேரல்களை தாண்டியுள்ளது. இதனுடன், பல நூறு சூப்பர் டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக காத்திருக்கும் நிலையில் உள்ளன.

ஹார்முஸ் நீரிணை முழுமையாக பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டவுடன் இந்த எண்ணெய் சரக்குகள் உலக சந்தைகளுக்கு புறப்பட வாய்ப்பு உள்ளது. இது உலகளாவிய எண்ணெய் விலைகளில் கூடுதல் அழுத்தத்தை குறைக்கக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகள் புதிய திருப்பத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது கவனம் ராணுவ மோதல்களில் இருந்து கடல் வர்த்தக பாதுகாப்பு நோக்கி மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+