டிவிட்டரில் டிரென்ட்டான #GetoutRavi.. நன்றி தெரிவித்து சென்னையில் பரபரக்கும் போஸ்டர்
சென்னை: ட்விட்டரில் டிரென்ட்டான #GetOutRavi ஹேஷ்டேக் தற்போது சென்னையின் சுவர்களில் போஸ்டராக ஒட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை ஆளுநர் ஆர் என் ரவி உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்திருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. அது போல் 7 தமிழர்கள் விடுதலை குறித்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிலுவை உள்ளதாலும் அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர். என். ரவி செயல்படுவதாலும் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அருகே சில கட்சிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன.

முரசொலி தலையங்கம்
அது போல் முரசொலியில் தலையங்கத்திலும் ஆளுநருக்கு எதிராக காட்டமான கருத்துகள் தீட்டப்பட்டன. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர். என். ரவி அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

உரை
அந்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களை ஆளுநர் தவிர்த்துவிட்டார். அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பெயரையே ஆளுநர் வாசிக்காமல் இருந்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆளுநர் உரை படித்து முடித்த பிறகு அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்து முடித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை. இது தனக்கு வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்தார். திடீரென முதல்வர் பேசியதால் என்னவென புரியாத ஆளுநர் ஆர் என் ரவி தனது பாதுகாப்பு அதிகாரியை அழைத்து என்னவென கேட்டார். அதற்கு அவர் அருகே வந்து எதையோ சொல்ல உடனே கோபமான ஆளுநர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து
அவை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை போல் முடியும் போது தேசிய கீதம் இசைக்கப்படும். ஆனால் அதுவரை பொறுமையாக இருக்காமல் ஆளுநர் வெளியேறியது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது. இதையடுத்து ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோஷமிட்டனர்.

போஸ்டர்
இந்த நிலையில் #GetOutRavi எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரென்டானது. இந்த நிலையில் தற்போது இந்த ஹேஷ்டேக் சென்னையின் பிரதான சாலைகளின் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டேக்கை டிரென்டாக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த போஸ்டரை திமுக பிரமுகர் ஒட்டியுள்ளார். தற்போது மீண்டும் ட்விட்டரில் டிரென்டாகியுள்ளது .அது போல் #MKStalin என்ற ஹேஷ்டேக்கும் டிரென்டாகி வருகிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications