15 நாட்களில் இனி வோட்டர் ஐடி.. விண்ணப்பிப்பது எப்படி? டிராக் செய்வது எப்படி தெரியுமா?
சென்னை: தற்போது புதிதாக ஒரு வாக்காளர் ஒருவர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தால் அது கைக்கு வந்து சேர ஒரு மாதத்திற்கும் மேல் ஆகும் நிலை உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு ஏற்படும் தேவையற்ற சிரமத்தை குறைக்கும் விதமாகவும் வெளிப்படத்தன்மையை உறுதி செய்யும் வகையில், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர்களுக்கு கிடைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் தேர்தலே ஒரு ஜனநாயக திருவிழா போல நடக்கிறது. தேர்தலில் போலி வாக்காளர்கள், கள்ள ஒட்டுக்கள் உள்ளிட்ட பிரச்சினையை தீர்க்க பல்வேறு சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் மேற்கோண்டு வருகிறது.

15 நாட்களுக்குள் அடையாள அட்டை
அந்த வகையில் வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டு வரப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தாலோ அல்லது திருத்தம் செய்தாலோ 15 நாளுக்குள் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
* புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க, தேசிய வாக்காளர் சேவை (NVSP) இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
* இணையதளத்தின் மேல் வலது பக்கத்தில் உள்ள "Sign-Up" என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
* பெயர், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதனை உறுதிப்படுத்திய பின் OTPக்கு ரெக்யூஸ்ட் கொடுக்க வேண்டும்.
* உங்கள் மொபைல் மற்றும் இமெயிலுக்கு ஒடிபி எண் அனுப்பப்படும். இந்த OTP-ஐ உள்ளிட்டு உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும்.
* புதிய வாக்காளர் பதிவுக்கான "Form 6"-ஐ கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், உறவினர் விவரங்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
* தேவையான ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை செக் செய்ய வேண்டும்.
* விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் துல்லியமாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு அறிவது?
* விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க, தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தைப் பார்வையிடவும்.
* இணையதள பக்கத்திற்கு சென்றவுடன் Track Application Status' என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு மொபைல் எண், கடவுச்சொல், கேப்ட்சா குறியீடு மற்றும் OTP ஆகிய விவரங்கள் கேட்கப்படும். இவற்றை பதிவு செய்ய வேண்டும்.
* Form 6 அல்லது Form 6A சமர்ப்பித்த பிறகு பெறப்பட்ட reference எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
* பின்னர் எந்த மாநிலம் என்பதை செலக்ட் செய்து "Submit" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு திரையில் விண்ணப்பத்தின் நிலை காட்டப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications