முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங். அதிருப்தி கோஷ்டி தலைவர் குலாம்நபி ஆசாத் சந்திப்பு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் அதிருப்தி அணிகளின் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் சென்னையில் சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன என்றும் குலாம்நபி ஆசாத் பாராட்டு தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் மீது காங்கிரஸ் மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின்ம 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
அப்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் குலாம் நபி ஆசாத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

காங்.அதிருப்தி
பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக 23 காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த 23 பேர் கொண்ட அணிக்கு தலைவரே குலாம் நபி ஆசாத்தான் என கூறப்பட்டது. இதனால் குலாம் நபி ஆசாத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி.சீட் வழங்கப்படவும் இல்லை.

ராஜ்யசபாவில் மோடி புகழாரம்
ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் விடைபெற்ற போது பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார். குலாம் நபி ஆசாத்தும் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அப்போதே அடுத்த துணை ஜனாதிபதி வேட்பாளராக குலாம் நபி ஆசாத்தை பாஜக முன்னிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற பேச்சு எழுந்தது. அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியில் தீவிர நடவடிக்கைகளிலும் குலாம் நபி ஆசாத் ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறார்.

ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு
ராஜ்யசபா இடைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பாக தமக்கு சீட் கேட்டு லாபி செய்துப் பார்த்தார் குலாம் நபி ஆசாத். ஆனால் டெல்லி மேலிடத்தின் அதிருப்தியை உணர்ந்து குலாம் நபி ஆசாத்துக்கு சீட் தர மறுத்தது திமுக தலைமை. இந்த நிலையில் இன்று சென்னையில் திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலினை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு
இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றன. இச்சந்திப்பின் போது எம்.பிக்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன. தந்தை கருணாநிதி போலவே மகனும் இருக்கிறார். நாளொன்றுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார் என புகழ்ந்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications