தாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி குத்திக்கொலை..கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி- என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் இளைஞர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரயிலுக்கு காத்திருந்த பெண் காலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஒருதலைக் காதல் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த கொலையை செய்ததாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ராம் குமார் கைது செய்யப்பட்டார். போலீசார் இவரை கைது செய்யும் இவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.

தற்கொலை

தற்கொலை


கைதுக்கு பின் சென்னை கைதுசெய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறைச்சாலையில் 2016 செப்டம்பர் மாதம் 17ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சுவாதி கொலை ஏன் நடந்தது என்பது குறித்த முழுமையாக விசாரணை முடிவுகள் இன்னும் வெளியே வரவில்லை. இந்த மரணத்திலேயே இன்னும் பல மர்மங்கள் நிலவும் நிலையில்தான் தற்போது சென்னையில் இதேபோன்று இன்னொரு சம்பவம் நடந்து உள்ளது.

கொலை

கொலை

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் இளைஞர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ஸ்வேதா என்ற கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் கழுத்தில் குத்தி தாக்கி உள்ளார். சிவப்பு நிற சுடிதார் அணிந்து வந்த அந்த பெண் ரயில் நிலையம் உள்ளே செல்லும் முன் அந்த இளைஞர் தாக்கி இருக்கிறார். இந்த பெண் எம்சிசியில் படித்து வந்தார். தினமும் அதே மார்க்கமாக ரயிலில் செல்வது வழக்கம்.

மருத்துவமனை

மருத்துவமனை


அதோடு அந்த இளைஞரும் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு அங்கேயே சுருண்டு விழுந்து உள்ளார். ரயில் நிலையம் அருகில் இருந்து போலீசார் உடனே அங்கு விரைந்து வந்த கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர். அதோடு அந்த பெண்ணை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஏன்

ஏன்

மாணவியைக் குத்திய இளைஞரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் கழுத்தில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இருவரும் முன்னாள் காதலர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த இளைஞரின் சமீபத்திய நடவடிக்கைகள் பிடிக்காமல் ஸ்வேதா அவரிடம் இருந்து பிரிந்து உள்ளார். இதை ஏற்க மனமின்றி ஸ்வேதாவை அந்த இளைஞர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். கடைசியாக இன்று ஸ்வேதாவை பேச்சு வார்த்தைக்கு கூப்பிட்ட நிலையில், என்னை விட்டுவிடு என ஸ்வேதா ஒதுங்க.. கோபத்தில் அங்கேயே ஸ்வேதாவை சரமாரியாக அந்த இளைஞர் தாக்கி உள்ளார்.

எப்படி நடந்தது?

எப்படி நடந்தது?

ஏற்கெனவே தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்திலும் உடலிலும் 6 இடங்களில் சரமரியாக குத்திவிட்டு. அதன்பி தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குற்றவாளி இளைஞரின் கழுத்தில் 9 தையல் போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர் மகேந்திரா சிட்டியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நெற்குன்றத்தை சேர்ந்தவர்.

நெற்குன்றம்

நெற்குன்றம்

2018ல் இதேபோல் சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி பிகாம் மாணவியை அழகேசன் என்ற நபர் கழுத்தையறுத்து கொலை செய்தார். தண்ணீர் கேன் பிஸ்னஸ் செய்து வந்த இவரும் நெற்குன்றத்தை சேர்ந்தவர். ஒரு தலைக் காதல் காரணமாக அஸ்வினி அழகேசன் கொலை செய்தார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் மீண்டும் சென்னையில் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 வன்முறை தவறு

வன்முறை தவறு

விரும்புவதும் வெறுப்பதும் அவரவர் விருப்பம். இதை ஏற்க மறுப்பவர்கள் வன்முறையில் இறங்குகின்றனர். ஆரம்பத்தில் மாற்றுப்பாலின ஈர்ப்பால் காதலில் இறங்கும் பெண்கள் சமபந்தப்பட்டவர் சரியில்லை என்று தெரியும்போது விலகுகின்றனர். அதை ஏற்க மறுக்கும் ஆண் கடைசியில் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க வேண்டாம் என்று வன்முறையை கையில் எடுக்கிறான். இது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+