எந்த சின்னம் வேண்டுமானாலும் கொடுங்க.. நாங்க வெற்றிபெறுவோம்.. கெத்து காட்டும் டிடிவி தினகரன்!
தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதாவது அமமுக வேட்பாளர்கள் எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்கள். ஆனாலும் இவர்கள் ஒரே கட்சியாக கருதப்பட மாட்டார்கள். மாறாக சுயேட்சையாக கருதப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
தமிழக சட்டசபை தொகுதிகள் முழு ரவுண்ட் அப் இதாங்க!

தமிழர்கள்
இதையடுத்து துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அதில், உலக தமிழர்கள் எல்லோரும் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கி உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை.

சுயேச்சை
குக்கர் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று நினைத்தோம். ஆனால் தற்போது எங்களுக்கு பொது சின்னம் கிடைக்க போகிறது. அதனால் எங்களுக்கு இதன் மூலம் நன்மைதான். நாங்கள் பொது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.

பொதுச் சின்னம்
எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும். ஆர்.கே நகரில் ஒரே வாரத்தில் குக்கர் சின்னத்தை பிரபலம் அடைய செய்தோம். அ.ம.மு.க.க்கு பொதுவான சின்னம் கிடைக்கும். அதையும் பிரபலம் அடைய செய்வோம்.

நல்லதே நடக்கும்
எங்களிடம் சின்னத்தை கேட்டால் சொல்வோம். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னதை பெற்றுக்கொள்வோம். நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன், எல்லா வேட்பாளர்களுக்காகவும் சென்று பிரச்சாரம் செய்ய இருக்கிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications