#NEET மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் - கமல்ஹாசன்
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் என்று கூறியுள்ள கமல், நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீட் அச்சம் காரணமாக கடந்த வாரம் விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சோகத்தின் சுவடு இன்னும் மறையாத நிலையில், இன்று மதுரையில் ஒரு மாணவி அதே காரணத்துக்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?" என்றார்.
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?
என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் என்று கூறியுள்ள கமல், நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை! என்று தெரிவித்துள்ளார்.

ஜோதிஸ்ரீ துர்காவின் மரண சுவடு காயும் முன்பாக நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications