அரசு ஊழியர்களுக்க சரியான நேரத்துல ப்ரமோசன் கொடுங்க; சாட்டையை சுழற்றிய இறையன்பு
சென்னை; அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வினை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆட்சி காலம் வரை தமிழ்நாட்டில் பதவி உயர்வு தொடர்பாக பல சர்ச்சைகள் நீடித்து வந்திருக்கின்றன. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது இதனைத் தொடர்ந்து, பதவி உயர்வு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசு துறைகளில் பல எழுதப்படாத விதிகள் உள்ளன. தற்போது சங்கம் அமைக்கும் உரிமை எந்த தனியார் நிறுவனதிலும் ஏற்றக்கொள்ளப்படாத நிலையில், அரசு துறைகளில் அது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சங்கத்தின் மூலம் இயங்கும் நபர்களை குறிவைத்து அவ்வப்போது சில நடவடிக்கைகள் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்படும். இதில் மிகவும் கொடுமையான விசயம் எதுவெனில், நாளை ஓய்வுபெற உள்ள நிலையில், இன்று அந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். இது சம்பந்தப்பட்ட ஊழியரின் பல ஆண்டு கால உழைப்பை அங்கீகரிக்கப்பாடாமல் இருப்பதற்கு சமமாகும்.
அதாவது சம்பந்தப்பட்ட துறைகளில் தவறு செய்யும் அரசு ஊழியர்களைத் தடுக்கவும் அவர்களைச் சீர்படுத்தவும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கையை இறுதி செய்தவுடன், நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படுகிறது. சில சமயங்களில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாள் வரை ஒழுங்கு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு, இழுத்தடிக்கப்படுகின்றன பின்னர் ஓய்வு பெரும் நாளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நடைமுறை பெரும்பாலும் சங்கத்தின் தலைமை பொருப்பில் பணியாற்றுபவர்களுக்கே அமல்படுத்தப்படும். இந்நிலையில் இந்த நடைமுறை சம்பந்தமாக திமுக அரசு புதியதாக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் சில மாற்றங்களை அறிவித்தது. இதன்படி, ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
தற்போது இதனைத் தொடர்ந்து, பதவி உயர்வு தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, "தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் .ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் பலன்களை சிலர் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் அரசிடம் வைக்கப்பட்டுள்ளன. இதனால் செயற்கை காலிப்பணியிடங்களை ஏற்படுத்துதலை தவிர்க்க வேண்டும். தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் இது தொடர்பான உத்தரவு அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications