தப்பு..தப்பு! எடப்பாடி மீதே கேஸ் போடுவீங்களா? ஈரோடு கிழக்கு ரிசல்ட் பாத்து -வெகுண்டெழுந்த ஜிகே வாசன்
"நேற்றைய தினம் விமான நிலைய பேருந்தில் நடந்த அநாகரிக சம்பவத்திற்கு காரணமான பிரமுகரை விசாரனை செய்யவில்லை. கைது செய்யவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை."
சென்னை: மதுரையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமமுக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு அரசு காழ்ப்புணர்ச்சியுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
முன்னாள் தமிழக முதல்வர், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது.

ஈரோடு கிழக்கு தேர்தல்
அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர் அவர்கள் மீதும், அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீதும் வழக்கு போடுவது அநாகரிகமானது, நியாயமற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலுக்கு பிறகு தி.மு.கவின் பல்வேறு சூழ்ச்சிகளையும் தாண்டி அ.தி.மு.க வினுடைய, வளர்ச்சியும், வாக்கு வங்கியும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வன்மையாக கண்டிக்கிறோம்
அவற்றை குலைப்பதற்கான, முறியடிக்க கூடிய முயற்சியாகவே இது தெரிகிறது. இதுபோன்ற செயல்களை தமிழ் மாநில காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது." என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நேற்று சிவகங்கையில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவருக்கு எதிராக முழக்கமிட்டார் ராஜேஸ்வரன்.

துரோகத்தின் அடையாளம்
எடப்பாடி பழனிசாமியை "துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகம் பண்ணியவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்." எனக் கூறியபடி பேசிய ராஜேஸ்வரன் அத்துடன் முகநூலில் லைவ் செய்து உள்ளார். அப்போது அவரது செல்போனை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் வேகமாக பறித்தார்.

வழக்கு ஏன்?
ராஜேஸ்வரனை அதிமுகவினர் பேருந்தில் இருந்து கீழே இறக்கி தாக்கி விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ராஜேஸ்வரன் மீது விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீதும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம்












Click it and Unblock the Notifications