திருக்குறள் ஆராய்ச்சி, அறநெறி பரப்பும் உலக மையம் நிறுவ வேண்டும்: மோடிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் அறநெறி பரப்பும் உலக மையம் நிறுவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயர்ந்த கருத்துக்களை கொண்ட சிறந்த நூல் திருக்குறள், அதனை இன்றைய இளைஞர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஏற்கனவே லடாக் பகுதியில் படைவீரர்களை சந்தித்து உரையாடிய போது
மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு"
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். இப்படி திருக்குறளின் மேன்மையை, பெருமையை, திக்கெட்டும் பேசி, பரப்பி வரும் பிரதமர் மோடிக்கு, தமிழ் மக்களின் சார்பாக நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருக்குறளின் அருமை, பெருமையை அறிந்து, உணர்ந்து, மகிழ்ந்து போற்றிப் பேசிவரும் பிரதமர் அவர்கள், "திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் அறநெறி பரப்பும் உலக மையம்" ஒன்றை நிறுவ வேண்டும். அதன் மூலம் குறள் சொல்லும், அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளை உலகமெல்லாம் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
Recommended Video
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications