ஹேப்பியில் இல்லத்தரசிகள்.. பழைய அடுப்புக்கு பதில் புது கேஸ் ஸ்டவ்! தள்ளுபடி பாருங்க! ஐஓசி சர்ப்ரைஸ்
சென்னை: வீடுகளில் சமையல் கேஸ் பயன்படுத்துவோருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இதனால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அவர்களது செலவும் மிச்சப்படுத்தப்படுகிறது.. தற்போது ஐஓசி முன்னெடுத்துவரும் இந்த நடவடிக்கையானது, இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும், ஆதரவையும் பெற்று வருகிறது. என்ன நடந்தது? இந்தியன் ஆயில் நிறுவனம் வெளிட்ட அறிவிப்பு என்ன?
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு தமிழகத்தில், 1.33 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், நுகர்வோர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் ஏராளமான அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது.

14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை வீடுகளுக்கும், 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை வணிக பயன்பாட்டிற்கு, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது...
ரப்பர் குழாய்கள்
வெறும் சிலிண்டர்கள் மட்டுமேயல்லாமல், வீடுகளிலுள்ள கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர், ரப்பர் குழாயை, ஐஓசி எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனமே விற்பனை செய்கிறது.. இதுபோன்ற புது ரெகுலேட்டரை வணிக சிலிண்டருக்கும் வழங்கி வருகிறது.
அதேபோல வீடுகளிலும்சரி, வணிகப்பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதிலும் சரி, வருடம் ஒருமுறையாவது சிலிண்டரின் ரப்பர் குழாயை மாற்றிவிட வேண்டும். ஆனால், இதை யாரும் சரிவர கடைப்பிடிப்பதில்லை..
இப்படி ரப்பர் குழாய்களை மாற்ற வேண்டிய நுகர்வோர்களின் விவரங்கள் அனைத்தும் கேஸ் ஏஜன்சிகளிடம் உள்ளதால், அவர்களை தொடர்பு கொண்டு, நுகர்வோர்கள் ரப்பர் குழாய் மாற்றும்படி கோரலாம் என்று ஐஓசி அறிவுறுத்தியிருக்கிறது.
புகார்கள், கருத்துக்கள்
அதுமட்டுமல்ல வாடிக்கையாளர்கள் புகார் தொடர்பான சேவைகளை பெற வேண்டுமானால், 1800 2333 555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சென்னை அலுவலக வாடிக்கையாளர் சேவை மையத்தை, 044 2433 9236 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, கஸ்டமர்களின் கருத்து, புகாருக்கான பதிவேடு அனைத்து கேஸ் ஏஜன்சிகளிலும் உள்ளதால், இந்தியன் ஆயில் அதிகாரிகளின் தொடர்பு விபரங்களும் உள்ளன.
ஐசிஓ வழங்கிவரும் இதுபோன்ற சலுகைகள், அறிவிப்புகளுக்கு நடுவே மீண்டும் ஒரு சூப்பர் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பெரும்பாலான வீடுகளில் பல வருடங்களாகவே , ஒரே கேஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பழைய அடுப்புகளின் திறன் குறையும்போது, வழக்கத்தை விட அதிக கேஸ் பயன்படுத்தப்படுகிறது.
திறன் குறைந்த கேஸ் அடுப்புகள்
அதனால்தான், வீடுகளில் பாதுகாப்பற்ற மற்றும் திறன் குறைந்த கேஸ் அடுப்புகளை மாற்றும் பணியை, இந்தியன் ஆயில் தற்போது கையில் எடுத்துள்ளது.. இதன்மூலம் 8 ஆண்டுகளாக ஒரே கேஸ் அடுப்பு பயன்படுத்தி வருவோரிடம், புதிதாக வாங்க சொல்லி வற்புறுத்தி வருகிறது.. 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வாடிக்கையாளரிடம், கட்டாயம் புதிய அடுப்பு வாங்குமாறு அறிவுறுத்தி வருகிறது. .
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, நிறைய வீடுகளில் இன்னமும் 8 வருடத்துக்கும் பழைய கேஸ் அடுப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள்.. இதுபோன்ற சிலிண்டர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் குறைந்திருப்பதால், கேஸ் நிறைய செலவாகும்.. நவீன மற்றும் உயர் வெப்ப திறன் உடைய கேஸ் அடுப்பை மாற்றிக் கொண்டால், வருடத்துக்கு 2 கேஸ் சிலிண்டர்களை சேமிக்க முடியும்.
பழைய அடுப்பு
அதேபோல, ஏஜென்சிகளில் LPG , உபகரண ஆராய்ச்சி மையம் மற்றும் ISI சான்றளிக்கப்பட்ட 2 பர்னர், 3 பர்னர் கேஸ் அடுப்புகள் விற்கப்படுகின்றன. பழைய அடுப்பை கொடுத்துவிட்டு, புதிதாக வாங்கினால், 500 ரூபாய் வரை தள்ளுபடியும் தரப்படும்" என்கின்றனர்.
பழைய காஸ் அடுப்புகளுக்கு பதிலாக, தள்ளுபடி விலையில் புதிய அடுப்புகள் விற்பனை செய்யப்படுவது, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது.. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையும், கஸ்டமர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications