தமிழகத்தில் நிலம் பத்திரப்பதிவு செய்வோருக்கு ஹேப்பி.. சொத்து பத்திரங்கள் ஆவணம் ரெடி? பதிவுத்துறை செம
சென்னை: முகூர்த்த நாட்களில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவு பத்திரப்பதிவு நடப்பது வழக்கமாகும்.. அந்தவகையில், நாளை ஆகஸ்ட் 28, நாளை மறுநாள் 29ம் தேதிகளும் சுபமுகூர்த்த தினம் என்பதால், கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.. இந்நிலையில், தமிழக பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது அவசியமாகும்.. முக்கியமாக, , முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வமும், மகிழ்ச்சியும் காட்டி வருகிறார்கள்.

அதனால்தான், சுபமுகூர்த்த நாட்களில் மட்டும், கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதுபோன்ற சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய்
இதன்மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறி வருகிறது.. அந்தவகையில், நாளை, நாளை மறுநாள் முகூர்த்த தினங்களாகும்.. எனவே, இந்த நாட்களில், பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்களை ஒதுக்கினால், தங்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் இக்கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பதிவுத்துறை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அது தொடர்பாக வெளியிடப்பட்ட அந்த செய்தி குறிப்பில், "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கூடுதல் டோக்கன்கள்
தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும்.
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பத்திரப்பதிவு - பதிவுத்துறை சாதனை
திமுகவின் இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், இதுவரை 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, வணிக வரித்துறை ஈட்டியிருப்பதாகவும், தமிழக வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் பெருமிதமாக கூறியிருந்தார்.. அதிலும், கடந்த 30-4-2025 அன்று ஒரே நாளில் பதிவு துறையில், ரூ. 272.32 கோடி வருவாய் ஈட்டியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications