பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. ரூ.5000 கிரைண்டர் மானியம் தரும் தமிழக அரசின் அறிவிப்பு.. பெண்கள் ஹேப்பி
சென்னை: தமிழகத்து பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும், பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதற்கும் வசதியாக, உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க ரூ.5,000 மானியம் வழங்கும் கிரைண்டர் மானியத் திட்டம் (Grinder Subsidy Scheme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இந்த கிரைண்டர் மானியத்திற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றுகள் என்னென்ன? யார் யாருக்கு கிடைக்கும்? கிரைண்டர் மானியம் பெறுவது எப்படி? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தமிழக அரசை பொறுத்தவரை, பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு மானியத்தொகையை வழங்கி வருகிறது.. குறிப்பாக, சுயதொழில் தொடங்க ரூ. 50,000 மானியம், மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 18,000 நிதி உதவி, சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் மற்றும் 50% மானியம் போன்ற திட்டங்கள் உள்ளன.

வாழ்வாதாரம் - புதிய முயற்சிகள்
எனினும், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிரைண்டருக்கு 5 ஆயிரம் மானியம் வழங்குவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது..
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தபோது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்..
அப்போது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்..
ரூ.5000 மானியத்தொகை
தமிழ்நாடு அரசின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரூ.10,000 அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5000/- மானியத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
முக்கியமாக, கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இந்த மானியத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருந்ததுடன் இந்த திட்டத்தில் 2000 மகளிருக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் அதிரடியாக அறிவித்திருந்தார்.
மானிய திட்டம் அறிமுகம்
இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், சுயமாக தொழில் செய்து பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காகவும் தமிழக அரசு கிரைண்டர் மானியத் திட்டம் (Wet and Dry Grinder Subsidy Scheme) என்ற பிரத்யேக மானிய திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது..
இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது... இந்த மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண்களாக இருக்க வேண்டும்... விண்ணப்பிப்பிப்போரும் 25 வயதிற்கு மேற்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
எப்படி கிரைண்டர் மானியம் பெறுவது?
இந்த ரூ.5000 மானியமானது பின்தங்கிய பிரிவினரான ஆதரவற்றோர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு கிடைக்கும்..
கிரைண்டர் மானியம் பெற விரும்பும் பெண்கள், அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்) கைம்பெண்கள் அல்லது ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்)
கிரைண்டர் மானியத்திற்கு விண்ணப்பித்த பிறகு, தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவார்கள்.. ஆனால், இது தொடர்பாக மாநில அரசு அறிவிப்பு வெளியான பிறகுதான், கிரைண்டர் மானியத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
அரசின் இந்த அறிவிப்பானது, பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications