களத்தை மாற்றும் முதல்வர் ஸ்டாலின்! சொந்த தொகுதியில் இதுதான் "பிளான் 6".. சென்னை கொளத்தூருக்கு ஹேப்பி
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூருக்கு செல்ல உள்ளார். அங்கு நடக்கும் ஏராளமான நிகழ்வுகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.. இன்று காலை 10 மணிக்கு கொளத்தூரில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார் முதல்வர்.. இதனால் கொளத்தூர் தொகுதியே ஆர்வத்தில் காத்து கிடக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூருக்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குறிப்பாக, முதல்வரின் முதல் நிகழ்ச்சியாக, ராஜாஜி நகர் 4வது தெருவில் முதியோர் இல்லம் கட்டித்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்..

அடுத்தபடியாக, ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஹரிச்சந்திரா விளையாட்டு மைதானத்தில் அனித்தா அச்சுவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ மாணவிகள் 356 பேருக்கு தையல் இயந்திரம், 131 பேருக்கு லேப்டாப் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 100 பேருக்கு இலவச கண்ணாடிகள் ஆகியவற்றை ஸ்டாலின் வழங்க உள்ளார் .
மூன்றாவது நிகழ்ச்சியாக, ஜி.கே.எம் காலனி 24A தெருவில் புனரமைக்கப்பட்ட குளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 4வது நிகழ்வாக, கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 317 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்...
5வது நிகழ்வாக, பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 உடல் ஊனமுற்றோருக்கு இருசக்கர வாகனங்கள் (Scooty) வழங்க உள்ளார்.
இறுதியாக புதிதாக கட்டப்பட்ட தணிகாச்சலம் கால்வாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த ஆறு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வந்தனர்.. இன்றையதினம் சொந்த தொகுதியில் மேற்கண்ட நலத்திட்ட உதவிகள் செய்வதால், கொளத்தூர் மக்கள் ஆர்வத்தில் காத்துள்ளனர்!!!












Click it and Unblock the Notifications