தாம்பரம் மக்களுக்கு நல்ல சேதி வரப்போகுது.. என்னாது வண்டலூர் வரை நீட்டிப்பா? நேரு சொல்றதை கேட்டீங்களா
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தாம்பரம் மாநகராட்சி வண்டலூர் வரை நீட்டிக்க ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை சமீபகாலமாகவே, அதிக கவனத்தை அரசு செலுத்தி வருகிறது.. கடந்த ஜனவரி மாதம் நடந்த சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, தாம்பரம் எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா தாம்பரம் மாநகராட்சி குறித்து முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
"தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட ரூ.10 கோடி அரசு அனுமதித்துள்ளது. ஆனால் திட்ட மதிப்பீடு ரூ.48 கோடியாக உள்ளது. மண்டல அலுவலகங்களில் போதிய வசதி இல்லை.

இங்கு ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. 326 ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். இன்னும் 3 ஆண்டுகளில் 15 பஞ்சாயத்துகளும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைகிறது. அதனால், இன்னும் போதிய நிதி ஒதுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.. இதற்கு அமைச்சர் கேஎன் நேரு பதிலளிக்கும்போது, "தாம்பரம் மாநகராட்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மண்டல அலுவலகங்கள் கட்டுவதற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி தருவோம். பணியாளர்களை நியமிப்பது குறித்தும் விரைந்து முடிவெடுத்து ஊழியர்களை நியமிப்போம்" என்று உறுதி கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அமைச்சர் நேரு, தாம்பரம் மாநகராட்சி வண்டலூர் வரை நீட்டிக்க ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.. தமிழ்நாடு சட்டப்பேரவை தற்போது நடந்து வருகிறது.. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட்டபடி உள்ளனர்.
அந்தவகைகேள்வி நேரத்தில் பேசிய தாம்பரம் உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, வளர்ந்து வரும் மாநகராட்சியாகத் தாம்பரம் இருப்பதால், பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்குப் பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம், பம்மல், உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணி முழுமை பெற்றுள்ளது. மீதமுள்ள செம்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கங்கரனை, பெருங்களத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகள் ஜூலை மாதம் முடிவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து பாதாளச் சாக்கடை பணிகள் இந்தாண்டே தொடங்கப்படும். மேலும், நீர்வளத்துறையுடன் ஆலோசித்துப் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் ஏரிகளை மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரும் வகையில் மேம்படுத்தப்படும். தாம்பரம் மாநகராட்சி பகுதியை வண்டலூர் வரை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை வந்துள்ளது , அக்டோபர் மாதம் 2024-ம் ஆண்டுக்கு முன்பாக கிராமப் பகுதிகளை இணைத்து நகர்ப்புறப் பகுதிகளை விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications