Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொங்கிட்டே ரயிலில் டான்ஸ் ஆடினாரே ஷகீலா பானு.. இனி இதை செய்தாலே ரூ.1000 அபராதம்.. அசத்துதே ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. ரிசர்வேஷன் முதல் தட்கல் வரை டிக்கெட் புக்கிங்கிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, அது தொடர்பான அறிவிப்பும் வந்தவண்ணம் உள்ளது.. இதனிடையே பயணிகளின் பாதுகாப்பையும் ரயில்வே நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது.. எனவே, இதுதொடர்பான கடிவாளங்களையும் கையில் எடுத்துள்ளது.. அது தொடர்பான ஒரு அறிவிப்புதான் தற்போது வெளியாகி, ரயில் பயணிகளுக்கு நிம்மதியை தந்து கொண்டிருக்கிறது.

ரயில் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. நேற்றுகூட ஒரு அறிவுறுத்தலை ரயில்வே வழங்கியிருந்தது.

rail Railway Passengers rs1000 fine

அதாவது, அவசர ஒதுக்கீட்டு (எமர்ஜென்சி கோட்டா-இ-கியூ) கோரிக்கையை, நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காத்திருப்பு பயணிகள் முன்னதாகவே தங்களின் நிலையை அறிந்து மாற்று ஏற்பாடுகளை செய்வதற்காகவே, இப்படியொரு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அறிவுறுத்தல்

மேலும், பயண அட்டவணையில் தாமதம் ஏற்படாதவாறு, ரயில்கள் நேரத்திற்கு புறப்படுவதற்கான நடவடிக்கையாக இத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் இ/கியூ கோரிக்கைகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இன்று மற்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. அதாவது, இன்று இளைய தலைமுறையிடம் ரீல்ஸ் மோகம் தலைவிரித்தாடுகிறது.. பஸ், ரயில், பாலம், நீர்வீழ்ச்சி, கடல், குன்று, கோவில் என எந்த இடமாக இருந்தாலும்சரி, அதிலும் ஆபத்து நிறைந்த இடமாக இருந்தாலும்சரி, அங்கு ரீல்ஸ் எடுத்து பதிவிடுவது அதிகமாகிவிட்டது.

ஆபத்தான ரீல்ஸ்

இப்படி ஆபத்து நிறைந்த இடங்களில் ரீல்ஸ் எடுப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.. அதிலும் இளம் மரணங்களை ஜீரணிக்கவே முடிவதில்லை.. இந்த ரீல்ஸ் ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்களில்கூட விரிவடைந்து செல்கிறது..

அதிலும் கரெக்ட்டா, ரயில் வரும்போது, தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுத்து, சிலர் பீதியை கிளப்பி விடுகிறார்கள்.. கடந்த மாதம்கூட, கன்னியாகுமரியை சேர்ந்த ஷகீலா பானு என்ற 30 வயது பெண், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ஓடும் ரயிலில், படிக்கட்டில் நின்று டான்ஸ் ஆடியும், தொங்கியபடியும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டிருந்தார். அவரது இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

படிக்கட்டில் வீடியோ

போலீசார் கைது செய்து, பிறகு எச்சரிக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.. "ரயிலில் நான் செய்தது தவறு.. தவறி கீழே விழுந்து இறந்திருந்தாலோ, கை,கால் உடைந்திருந்தாலோ எனது நிலை என்னவாகியிருக்கும்? என்று இப்போது நினைத்து பார்க்கிறேன். ரயிலில் செல்லும்போது யாரும் படிகட்டில் நின்று வீடியோ போடாதீர்கள்' என்று ஷகீலா பானு வேண்டுகோள் விடுத்ததும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில்தான், இதுபோன்ற விபத்து, அஜாக்கிரதை, உயிரிழப்புகள் போன்றவற்றை தடுக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ரயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ மட்டுமே அனுமதி

ரெயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, ரயில் நிலையங்களில் போட்டோ எடுக்கலாம், ஆனால், வீடியோவுக்கு அனுமதி இல்லை.. நிறைய பேர் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் வந்தன.. எனவே, ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளம் ஆகியவற்றில் செல்போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள். அப்படி யாராவது ரீல்ஸ் எடுத்தால், குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்களும் கைது செய்யப்படுவார்கள்.. ரயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், இனிமேல் இதைத்தான் அதிகமாக கண்காணிக்க போகிறார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+