ரேஷனில் அதிரடி.. தமிழகத்தின் கனவு நனவாகுது.. மகிழ்ச்சியில் விவசாயிகள்.. சர்ப்ரைஸ் தந்த மத்திய அரசு
சென்னை: தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கை ஒன்று விரைவில் நிறைவேற போகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தந்துள்ள நம்பிக்கை, விவசாயிகளுக்கு நம்பிக்கையை தந்து வருகிறது. அதிலும், பண்டிகை காலம் துவங்கிவிட்டதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இந்த அறிவிப்பானது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, 1,038 டன்னாக கடந்த வருடம் குறைத்திருந்தது மத்திய அரசு. எனினும், தமிழக அரசின் பல்வேறுகட்ட வலியுறுத்தல்களை தொடர்ந்து தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதாவது, தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கியதுபோலவே, மாத மாதம், 8,500 டன் கோதுமையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது..

கோதுமை: எனினும், கோதுமை ஒதுக்கீட்டை அதிகரித்து, திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தில் விற்கப்படும் அரிசியின் விலையை கிலோவிற்கு ரூ.20 ஆக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசின் அதிகாரிகளிடம் ஆலோசித்த மத்திய அமைச்சா் மானிய விவரங்களை ஒத்திசைவு செய்து, விரைவில் விடுவிப்பதாக நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, கோதுமை விளைச்சல் ஒரே சீராக இருப்பதால் ஒதுக்கீட்டைக் கூட்டுவதில் சிரமம் உள்ளதாகவும், இருந்தாலும் இதை அதிகரிக்க பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷியும் சில தினங்களுக்கு முன்பு உறுதியளித்திருந்தார்.
கேழ்வரகு: இந்நிலையில், கேழ்வரகு அதிகம் விளையும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், அடுத்த மாதம் முதல் நேரடி கொள்முதல் நிலையங்களை துவக்கி, கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்படுகின்றன. இந்த பொருட்களுடன் சேர்த்து, கூடுதலாக கேழ்வரகு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. முதல் கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.
விவசாயிகள்: அதனால், தமிழக விவசாயிகளிடம் இருந்து, வரும் நவம்பர் முதல் ஜனவரி வரை, 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்து தர, வாணிப கழகத்திற்கு மத்திய உணவு துறை அனுமதி அளித்துள்ளது. அந்தவகையில், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 100 கிலோவுக்கு, 4,290 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல், கேழ்வரகு அதிகம் விளையும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், அடுத்த மாதம் முதல் நேரடி கொள்முதல் நிலையங்களை துவக்கி, கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. இனி வரும் அடுத்தடுத்த சீசனில் அதிக கேழ்வரகு கொள்முதல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications