இட்லி மாவு பாக்கெட்டுக்கு ரேஷன் அரிசி.. விருதுநகருக்கு வியப்பை தந்த 500 கிலோ மூட்டை.. இனிமே நிம்மதி
சென்னை: ரேஷன் அரிசியை கடத்தினால், அவர்களது குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும்" என்று ஏற்கனவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும, தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் என்பது நடந்து கொண்டேயிருக்கிறது. இதுசம்பந்தமாக காவல்துறை அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.
தமிழகத்தில், ரேஷன் அடடைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறையவில்லை..

கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி
ரேஷன் அரிசியை, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்துவது தொடர்கதையாகி வருகிறது. தமிழக எல்லைகளில் இந்த ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்கென்றே, புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.. இதுபோன்ற புரோக்கர்களால்தான், ரேஷன்தாரர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு முறையாக கிடைக்காமல் போய்விடுகிறது.
பெரும்பாலானோர், ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கி, இட்லி மாவு அரைத்து பாக்கெட்டுகளில் விற்கிறார்கள்.. குறிப்பாக, அரிசி மில்களுக்கு, ரேஷன் அரிசியை வாகனத்தில் வைத்து கொண்டுபோகிறார்கள்.. எனவேதான், ரேஷன் அரிசி கடத்தலை ஒழிக்கும் முயற்சியில், போலீசார் தீவிர வேட்டையை நடத்தி வருகிறார்கள்.
இட்லி மாவு கடைகளுக்கு விநியோகம்
இந்நிலையில், தூத்துக்குடி கோவில்பட்டியிலிருந்து கயத்தாருக்கு கிளவிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு நேற்றைய தினம் ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, அவரது தலைமையில் தனிப்பிரிவு போலீசார் கிளவிப்பட்டி பகுதிக்கு சென்று, முன்கூட்டியே வாகன சோதனையில் ஈடுபட்டனர்..
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து, அதிலிருந்த ஓட்டுனர் மணிகண்டனை பிடித்து விசாரித்துள்ளனர்.. அப்போதுதான், அந்த காரில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் உறுதியானது.. இதையடுத்து, காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேஷன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இரண்டையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மணிகண்டனையும் கைது செய்தனர்.
மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி
அதேபோல, சென்னை ஓட்டேரி பகுதியில் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதாகவும், அதை வாங்கி, அங்குள்ள வீடுகளுக்கு இட்லி மாவு அரைப்பதற்கு பயன்படுத்துவதாகவும் ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஓட்டேரி கொசப்பேட்டை திருவிக தெரு பகுதியில் ஓட்டேரி போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.. அப்போது, இட்லி மாவு அரைக்கும் ஒரு கடையில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 322 கிலோ ரேஷன் அரிசி, 3 கிரைண்டர்கள் மற்றும் 500 கிலோ இட்லி மாவு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீண்டும் சுற்றிவளைத்து கைது
இதுதொடர்பாக ஓட்டேரி கொசப்பேட்டை திருவிக தெரு பகுதியைச் சேர்ந்த உஷா (45) என்பவரையும் கைது செய்தனர். அவரை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 நாட்களுக்கு முன்புகூட, விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி தெற்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் ஆய்வு செய்தபோது, திருமங்கலம் அருகே உள்ள அரசம்பட்டியை சேர்ந்த கனகபாண்டி(29), என்பவர் 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு தந்த நிம்மதி தகவல்
கடந்த வாரம் காவல்துறை தரப்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.. அதில், கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான கடத்தல் ரேசன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும், ரேசன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11571 நபர்கள் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய சுமார் 2012 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 89 பேருக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications