பிரபல கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு.. நண்பர் வீட்டில் நைட் ஸ்டே பண்ணாராம்.. காலைல பார்த்தால்.. ஷ்ஷாக்கிங்
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு, போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று புகார் அளித்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் சினிமாவில் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தைவிட, இன்ஸ்டாவில் போட்ட ஆட்டம்தான், இவரை பெருமளவு பிரபலமாக்கியது.. சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்..
ஐபோன் எங்கே: ஷாலு ஷம்மு சல்சா நடனக்கலைகளில் கை தேர்ந்தவராம்.. ஷூட்டிங் இல்லாத சமயங்களில், நிறைய பார்ட்டிகளில் பங்கேற்று வருகிறார்.. இவர் கடந்த ஜனவரி மாதம் 2 லட்ச ரூபாய் கொடுத்து ஐபோன் ஒன்றை வாங்கி உள்ளார்.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகையன்று நண்பர்களோடு இணைந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார் நடிகை ஷாலு.. பிறகு பார்ட்டியை முடித்துவிட்டு மிட்நைட்டில் 2 மணியளவில் தன்னுடைய நண்பர்களுடன் சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் சென்று தங்கி உள்ளார்... மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஷாலு ஷம்முவின் ஐபோனை காணவில்லையாம்.
அதிர்ச்சி : இதனால், அதிர்ச்சியடைந்த ஷாலு, நண்பர்களுடன் தங்கியிருந்த அந்த ரிசார்ட்டுக்கு உடனடியாக சென்றுள்ளார்.. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளார்.. ஆனால், ஐபோன் கிடைக்கவில்லை.. இதனால், செல்போன் வாங்கிய ஷோரூம் என பல இடங்களில் தேடியிருக்கிறார்.. அப்போதும் செல்போன் கிடைக்காததால் கடந்த 11-ம் தேதி பட்டினம்பாக்கம் போலீசுக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
சூளைமேடு நண்பர் வீட்டில், அன்றைய தினம் இரவு தங்கியிருந்தாலும், பார்ட்டிக்கு சென்ற ஓட்டல் பட்டினம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்டது என்பதால், பட்டினம்பாக்கம் போலீசில் புகார் தந்திருக்கிறார் ஷாலு.. அதன்பேரில்தான் போலீசாரும் செல்போனை தேட துவங்கினர்.. அந்தவகையில், செல்போனை மீட்கும் செயலியான, "ஐகிளவுடு" மூலம் தேட துவங்கினர்.. அப்போதுதான், சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில், அந்த ஐபோன் கடைசியாக இருந்ததை கண்டுபிடித்துள்ளார் ஷாலு. அதனால், சம்பந்தப்பட்ட நண்பர்கள் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக சொல்லி, நடிகை ஷாலு ஷம்மு, பட்டினம்பாக்கம் போலீசில் தகவல் தந்துள்ளார்..

சிக்குவார்களா: இதனையடுத்து பட்டினம்பாக்கம் போலீஸார் சந்தேகத்துக்குரிய நபர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறியிருக்கிறார்கள்.. சந்தேகத்தின் பேரில் இவர்கள் குறித்து புகார் தந்தாலும், ஐபோன் அவர்களிடம்தான் இருக்கிறதா? என்பது உறுதியாக தெரியவில்லை.. அந்த ஐபோன் 2 லட்சம் ரூபாயாம்.. ஷாலு ஷம்முவின் பல்வேறு வீடியோக்கள் அந்த ஐபோனில் இருப்பதாகவும், முக்கியமான போட்டோக்கள் அதில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதனால் அந்தவீடியோ, மற்றும் போட்டோக்களுக்காகவே ஐபோனை மீட்க வேண்டும் என்ற பதற்றத்தில் நடிகை ஷாலு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications