என்னப்பா போலாமா! டார்ஜிலிங் ஆக போகுது செங்கோட்டை-புனலூர்.. தெற்கு ரயில்வே கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலைமுகடுகள், அடர்ந்த காடுகள், வளைவுகள், குகைகள், பாலங்கள் என 49 கிலோமீட்டர் தூரம் உள்ள செங்கோட்டை புனலூர் ரயில் பாதையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. டார்ஜிலிங், சிம்லா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இருப்பது போல செங்கோட்டை புனலூர் இடையே கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய விஸ்டாடோம் பெட்டிகளை இணைக்க ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரயில் பாதைகளில் இயற்கை கொடுத்த அற்புத கொடை என்றால் அது செங்கோட்டை புனலூர் இடையேயான ரயில் பாதை என்றே சொல்லலாம். 1900 ஆம் ஆண்டு முதலே இந்த ரயில் பாதையில் சரக்கு ரயில்கள் முதன் முதலில் பயணித்தது.

அதற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து 1904 முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ஏற்றம், இறக்கம், ஆண்டு முழுவதும் மழை பெய்யும் மழைக்காடுகள், வளைவுகள், குகைகள் என இயற்கை எழில் சூழ்ந்த இந்த ரயில் பாதை 49 கிலோமீட்டர் தூரம் கொண்டது.

Railway Vistadome Coach chennai

இரண்டு ரயில் இன்ஜின்களுடன் இயக்கப்படும் 14 ரயில் பெட்டிகள் உயரமான 13 கண் பாலத்தை கடந்து செல்வதை பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே கிடையாது. அதே நேரத்தில் 20 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை வேகத்தில் தான் இந்த ரயில் இயக்கப்படும். காரணம் குகைகள், ஏராளமான வளைவுகள், ஏற்ற இறக்கம் இருப்பதால் 49 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு மூன்று மணி நேரம் வரை ஆகும்.

மேலும் ரயிலில் பயணிக்கும் போது அருவிக, மழைக்காடுகள், 13 கண் பாலம் உள்ளிட்ட 200 பாலங்கள், சுமார் 2000 அடி நீளம் கொண்ட கொட்டவாசல் சுரங்கப்பாதை, 50க்கும் அதிகமான வளைவுகள் இதில் இருக்கிறது. இதனால் பயணத்துக்கு மட்டுமல்லாது இந்த ரயிலில் பயணிப்பதே ஒரு சுற்றுலா அனுபவம் தான். இந்த நிலையில் கோவா, மும்பை டெக்கான், கல்கா சிம்லா, அரக்கு பள்ளத்தாக்கு, நீலகிரி மலை ரயில், டார்ஜிலிங் இமயமலை ரயில் ஆகிய ரயில்களில் இணைக்கப்படுவது போல செங்கோட்டை புனலூர் இடையிலான ரயிலிலும் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய விஸ்டாடோம் பொட்டிகளை ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

இந்த கண்ணாடி ரயில் பெட்டிகளை பயணம் செய்யும்போது 360 டிகிரியிலும் இயற்கை அழகை ரசிக்க முடியும். மேலும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளும் இதற்காகவே வருவார்கள். கூடுதல் சிறப்பம்சமாக அந்த ரயில் பெட்டிகளை 360 டிகிரி சுழலும் இருக்கைகளும் அமைக்கப்பட்டு இருப்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள். எனவே கண்ணாடி மேற்கூரை பெரிய ஜன்னல்கள் கொண்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகளை இந்த தடத்தில் இணைக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிஸ்டாடூன் ரயில் பெட்டிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. கண்ணாடி மேற்கூரை, பெரிய ஜன்னல்கள், சூழலும் இருக்கைகள் ஆகியவை இந்த பெட்டிகளில் இருக்கும். இதனால் சாதாரண பயணிகள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவார்கள். இது கேரளா தமிழ்நாடு இடையே சுற்றுலா வளர்ச்சியில் பெரும் பங்கு வைக்கும். அது மட்டுமல்லாமல் மதுரை குருவாயூர், சென்னை கொல்லம், எர்ணாகுளம் வேளாங்கண்ணி, தாம்பரம் திருவனந்தபுரம் ஆகிய நீண்ட தூர ரயில்களிலும் விஸ்டாடோம் பெட்டிகளை இணைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+