இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம்
பெங்களூர்: இந்தியாவில் திருமண உறவுக்கு வெளியிலான உறவுகளை ஊக்குவிக்கும் 'கிளிடென்' ஆப் 40 லட்சம் பயனர்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கலாச்சார ரீதியாகத் திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்தியாவில், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக இத்தகைய மாற்றங்கள் சத்தமில்லாமல் நடந்து வருவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களின் பங்கேற்பு 148% அதிகரித்துள்ளதாக கிளிடென் ஆப் தெரிவித்துள்ளது. இதனை பார்க்கும் போது பெண்கள் கள்ளக்காதலை நார்மலைஸ் செய்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் கள்ளக்காலுக்கு எந்த தண்டனையும் இல்லை.. திருமணத்தை மீறி ஒரு ஆண் தன் மனைவியை தவிர வேறு பெண்ணுடன் உறவில் இருந்தால் சட்ட ரீதியாக எந்த தண்டனையும் இல்லை.. அதேபோல் திருமணத்தை மீறி ஒரு பெண், தன் கணவனை தவிர வேறு ஆணுடன் உறவில் இருந்தால் அதற்கும் சட்ட ரீதியாக எந்த தண்டனையும் கிடையாது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் கள்ளக்காதலை கள்ளக்காதல் என்று கூறுவதே தவறு என்கின்றன.

நீதிமன்றங்கள் கள்ளக்காதலை திருமணம் கடந்த உறவாகவே பார்க்கின்றன. கள்ளக்காதலை பொறுத்தவரை சட்டத்தின் பார்வையும், சமூகத்தின் பார்வையும் வேறு வேறாக உள்ளன. 18 வயது நிறைவு பெற்ற ஆண் பெண் உறவில் இருப்பதில் தவறு இல்லை என்கிறது சட்டம். ஆனால் திருமணம் செய்தால் தான் தவறு என்று இருக்கிறது. இதனால் திருமணத்தை கைவிட முடியாதவர்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவது சாதாரணமாக மாறி வருகிறது.
இந்தியாவில் திருமண உறவுக்கு வெளியிலான உறவுகளை ஊக்குவிக்கும் 'கிளிடென்' செயலி 40 லட்சம் பயனர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது . இதில் யூசர்கள் என்று பார்த்தால் 65% ஆண்கள் ஆவர். 35% பெண்கள் ஆவார். குறிப்பாக சொல்வது என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களின் பங்கேற்பு 148% அதிகரித்துள்ளது. இது பெண்கள் தங்கள் உறவு சார்ந்த முடிவுகளைச் சுதந்திரமாக எடுக்கத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது.
கள்ளக்காதலி9ல் பெங்களூரு (18%) முதலிடத்திலும், ஹைதராபாத் (17%) இரண்டாம் இடத்திலும் உள்ளன. டெல்லி (11%), மும்பை (9%), புனே (7%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கோவை, லக்னோ போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் கள்ளக்காதலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பயனர்கள் தினமும் 1 முதல் 1.5 மணிநேரம் இதில் செலவிடுகிறார்கள். மதியம் 12 - 3 மணி மற்றும் இரவு 10 - 12 மணி ஆகிய நேரங்களில் செயல்பாடு அதிகமாக உள்ளது.
இந்த திருமணம் கடந்த ஆப்பில் உள்ளவர்கள் ஏன் இப்படி ஆப்களை பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு, 33% பேர் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாததே இதற்குக் காரணம் என்கின்றனர். அதேபோல் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருப்பதாகக் கூறுபவர்களில் கூட 51% பேர் தங்கள் துணையுடன் உணர்ச்சி ரீதியான பிணைப்பு இல்லை என்கிறார்கள். வெளிப்படையாக சொல்வது என்றால், தாம்பத்திய வாழ்க்கை என்பது சரியாக இல்லை என்கிறார்கள்.
ஆண்கள் vs பெண்கள்: ஆச்சரியப்படும் விதமாக, இதில் ஈடுபடுபவர்களில் ஆண்கள் (43%) மற்றும் பெண்கள் (42%) கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. அதேநேரம் 61% பேர் "மனிதர்கள் இயற்கையாகவே ஒருவருடன் மட்டும் வாழப் பிறந்தவர்கள் அல்ல (Non-monogamous)" என்று நம்புகிறார்கள்.
பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் இது அதிகரிக்கக் காரணம் என்ன?
ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு ஷிப்டுகளில் வேலை செய்வது, வார இறுதி நாட்களில் கூட வேலையில் மூழ்கியிருப்பது துணைகளுக்கு இடையே ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிவிடுகிறது.
பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் பெண்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு கொண்டவர்கள் ஆவார். சமூகக் கட்டுப்பாடுகளை விடத் தங்களின் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கிராமப்புறங்களைப் போலன்றி, பெருநகரங்களில் அக்கம் பக்கத்தினர் யார் என்று தெரியாது. இந்த 'ரகசியத்தன்மை' இத்தகைய உறவுகளுக்குப் பாதுகாப்பான சூழலைத் தருகிறது.
இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற தளங்கள் புதிய நபர்களுடன் பழகுவதை எளிதாக்கியுள்ளன.
பெண்கள் இதை 'நார்மல்' ஆக எடுத்துக்கொள்கிறார்களா?
40 லட்சம் பயனர்களில் 35% (அதாவது சுமார் 14 லட்சம் பேர்) பெண்கள் என்பது ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண் பயனர்கள் 148% அதிகரித்திருப்பது, பெண்கள் இந்த விஷயத்தைப் பழையபடி ஒரு 'பாவமாகவோ' அல்லது 'தவறாகவோ' பார்க்காமல், தங்களின் உணர்ச்சி ரீதியான அல்லது உடல் ரீதியான தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு வழியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது.
திருமணத்திற்குப் பிந்தைய எதிர்பார்ப்பு
பழைய தலைமுறைப் பெண்கள் திருமண வாழ்க்கையில் கசப்பு இருந்தாலும் சகித்துக்கொண்டு வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் "திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான், அதுவே முழு வாழ்க்கை அல்ல" என்றும், அதில் கிடைக்காத மகிழ்ச்சியை வெளியே தேடுவதில் தவறில்லை என்றும் நினைக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே செய்த இந்தத் தவறை, இப்போது பெண்களும் சம அளவில் (42%) செய்வதாக ஒப்புக்கொண்டிருப்பது, இந்தியத் திருமண அமைப்பின் பாரம்பரியக் கட்டமைப்பு ஆட்டம் காண்பதை உறுதிப்படுத்துகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications