12,000 வருஷமா தூங்கிட்டேன்.. எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு.. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!
சென்னை: எத்தியோப்பியாவில் சுமார் 12,000 ஆண்டுகள் பழமையான ஹேலி குப்பி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியதால் உலக அளவில் விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த எரிமலையில் இருந்து கிளம்பிய பாறை துகள்கள், சாம்பல் ஆகியவை மேகங்களுடன் கலந்து பரவி வருவதால் பல நாடுகளில் விமான சேவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மிகக் கடுமையான அவதியை சந்தித்துள்ளனர்.
எத்தியோப்பியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) என்ற எரிமலை திடீரென வெடித்ததால், வளிமண்டலத்தில் பெருமளவு சாம்பல் மேகங்கள் உருவாகியுள்ளது. எரிமலை வெடிப்பால் வானிலைக்கு 14 கிலோமீட்டர் உயரம் வரை தீக்குழம்பும் பறந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடிப்பால் பெரிய அளவில் பாறைத் துகள்கள், புகை, சாம்பல் ஆகியவை வான்வெளியில் பரவின. இது கிழக்கு ஆப்பிரிக்கா, செங்கடல், வளைகுடா நாடுகள் ஆகியவை வழியாக பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எத்தியோப்பியா எரிமலை
இப்படிப்பட்ட சாம்பல் மேகங்களால் விமான எஞ்சின்களில் பெரும் பிரச்சனை ஏற்பாட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மத்திய கிழக்கு வான் வழித்தடத்தில் இயங்கும் பல்வேறு சர்வதேச விமானங்கள் பாதுகாப்பு காரணங்களால் தடம் மாற்றப்பட்டும், சில விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த எரிமலை வெடிப்பின் எதிரொலியாக சென்னையிலும் விமான சேவை சீர்குலைந்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை-மும்பை ஏர் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டது.
ஹெய்லி குப்பி வெடிப்பு
இதேபோல மும்பை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய சில உள்நாட்டு சேவைகள் நேரடியாக ரத்து செய்யப்பட்டன. காலை 9.30 மணிக்கு மும்பை நோக்கி புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. சாம்பல் மேகங்கள் அதிகமாக காணப்படும் வான்வழிப் பகுதிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதால், சில விமானங்கள் வேறு வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை சென்னையிலிருந்து லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களாகும்.
எரிமலை சாம்பல் மேகம்
சில விமானங்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதால், விமானங்கள் புறப்படும் நேரம் 3 மணி நேரம் வரையிலும் தாமதமாகியுள்ளது. குறிப்பாக ஏர் இந்தியா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான சேவைகள் நேரத்தை மாற்றியுள்ளன. சிலவ விமானங்கள் தவிர்க்க இயலாத காரணத்தால் ரத்து செய்ய நேரிட்டுள்ளது. இதனால் இன்று சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகள் விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளாயினர். ஏற்கனவே புறப்பட தயாராக இருந்த பல விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், காலை முதல் விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்தது.
விமான சேவை பாதிப்பு
சில பயணிகள் சென்னையில் தங்கும் ஏற்பாடுகள் செய்து தர வேண்டுமென விமான நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிக அளவிலான பயணிகள் வேலை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக உடனடியாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழலில் எரிமலை வெடிப்பு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாரத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தடைபட்ட விமான சேவைகள் எப்போது மீண்டும் இயக்கப்படும் என உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
பயணிகள் அவதி
எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக உருவான சாம்பல் மேகங்கள் சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் அது சரியான பிறகு அடுத்த கட்ட தகவல்கள் வெளியாகும் எனவும் நிலைமையை பொருத்தே விமான சேவை எப்போது தொடங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று முழுவதும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கும் பயணிகள் தங்கள் விமானங்கள் இயக்கப்படும் நேரம் குறித்து விமான நிறுவனங்களிடம் நேரம் உள்ளிட்ட தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications