சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் கோடைக்கால வெயில் தற்போதே சதம் அடிக்கத் தொடங்கி விட்டது.. இன்னும் மே மாதம் வராத சூழலில், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்களாம்.. நிலையில், பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கடைகளில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வரத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோடை காலம் நெருங்கி வரும் சூழலில், அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும் நிழலுக்காகப் பந்தல் அல்லது தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.. இது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வெயில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

ரேஷன் கடைகள்
ரேஷன் கடைகளில் நிலவி வரும் இடநெருக்கடி மற்றும் வெயில் கொடுமையைத் தவிர்க்க, ஏற்கனவே சில பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி நிதி மூலம் நிரந்தர மேற்கூரைகளை அமைத்துக் கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக, பழைய கட்டிடங்களில் இயங்கும் கடைகளைச் சீரமைத்து, மக்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக நவீன ஷீட்கள் போடப்பட்டு வருகின்றன.. இந்தத் திட்டத்தைத் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நிழல் வசதி மட்டுமின்றி, கடைகளுக்கு வரும் மக்களுக்குக் குளிர்ந்த குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..
இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன், அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது..
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி
நேர மாற்றத்தை பொறுத்தவரை, காலை 7 மணிக்கே கடைகளைத் திறந்து வெயில் ஏறுவதற்குள் பொருட்களை விநியோகிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மதிய நேரங்களில் கடைகளை மூடிவிட்டு, மாலை வேளைகளில் கூடுதல் நேரம் செயல்பட வைப்பதன் மூலம் மக்கள் வெயிலில் அலைவதைத் தவிர்க்க முடியும்.. பல இடங்களில் தற்காலிகப் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருவதால், இனி வரிசையில் நிற்கும் மக்கள் நிழலிலேயே காத்திருந்து பொருட்களை பெற்று செல்லலாம்.
இதுதவிர, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவாகப் பொருட்களை வழங்கவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. தமிழக அரசின் இந்தத் திடீர் நடவடிக்கைகள் கோடை வெயிலைச் சமாளிக்க மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளன..
தமிழக அரசு ஏற்பாடுகள்
ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் விநியோகம் தொடங்க உள்ள நிலையில், இந்த முன்னேற்பாடுகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்பட உள்ளன.
ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இந்த முடிவு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது, ஏனெனில் அவர்களும் கடும் வெப்பத்தில் பணியாற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.. அரசு எடுத்துள்ள இந்த முடிவானது பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, தடையற்ற விநியோகத்தையும் உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!
இந்தத் தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கும், ரேஷன் கார்டு வைத்துள்ள மற்றவர்களுக்கும் பகிருங்கள்.. அப்போதுதான் அவர்கள் நேரத்தையும் வசதியையும் அறிந்து திட்டமிட்டுச் செல்ல உதவியாக இருக்கும்..!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications