அதிரடி.. இந்தியாவிலேயே முதல்முறை.. நேரடி சாட்சி இல்லாமலே.. கோர்ட்டில் யுவராஜ் மாட்டியது இப்படித்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியமானது ஆகும்.

2015 கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாகியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் யுவராஜ் தரப்பு தொடுத்த வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது; மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

 Gokulraj case: Why is Sentencing of Yuvaraj by the speical court and High Court is unique?

இந்திய வரலாற்றில் நேரடி சாட்சியம் இல்லாமல் சிசிடிவி ஆதாரம், பிறழ் சாட்சியம் இருந்தும் கூட அதை பற்றி கவலைப்படாமல்.. நீதிபதிகளே நேரில் இறங்கி ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஊடக பேட்டி - சிசிடிவி - நேரடி ஆய்வு என்று பல புதிய விஷயங்களை வைத்தும் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய அதிரடி தீர்ப்பை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியது.

மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சம்பத் குமார் வழங்கிய இந்த தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் உறுதி செய்துள்ளனர்.

இந்த வழக்கு ஏன் வித்தியாசமானது என்று கோகுலராஜ் தரப்பு வழக்கறிஞர் மோகன் விளக்கி உள்ளார். அதில், கோகுலராஜ் கொலையை தற்கொலை என்று தொடர்ந்து தவறுதலாக பரப்பி வந்தார் யுவராஜ். ஆனால் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் சார்பாக மருத்துவ நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறினார். அதுதான் வழக்கை மாற்றியது. அதன்பின் மருத்துவ நிபுணர் குழு விசாரணைதான் இது தற்கொலை அல்ல கொடூர கொலை என்று தெரிய வந்தது. இதுதான் வழக்கை மாற்றியது. யுவராஜ் உள்ளிட்டோர் கைபேசியை கொலை நடந்த நேரத்தில் அணைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் சிசிடிவி கேமராவில் சிக்கியது ஆதாரப்பூர்வமான காட்சிகள் உள்ளன. இதையடுத்து கோகுலராஜுடன் இருந்த பெண் ஜோதிமணி பிறழ் சாட்சியம் ஆனார். இருந்தாலும் அவர் எந்த சூழ்நிலையில் பிறழ் சாட்சியம் ஆனார் என்பதை நீதிமன்றம் விசாரித்தத்து. அதோடு அந்த பெண்ணையும் நீதிமன்றம் கண்டித்தது.

இதில் நேரடி சாட்சியம் இல்லை என்றாலும் யுவராஜ் கோவில் மலையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் தடயவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. சாட்சி பிறழாக மாறலாம்.. ஆனால் சூழ்நிலை சாட்சியம் மாற முடியாது. இந்த வளர்ந்த நூற்றாண்டில் சிசிடிவி காட்சி உறுதி செய்யப்பட்டு அதை கோர்ட் ஏற்றுக்கொண்டு உள்ளது. இப்படி கோர்ட்டில் நடப்பது அரிதானது.

பின்னர் ஊடகம் ஒன்றில் யுவராஜ் பேசுகையில்.. யுவராஜ் மலைக்கு சென்றதையும்.. கோகுலராஜ் செல்போனை பிடுங்கியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதுதான் வழக்கில் மேலும் திருப்பத்தை ஏற்படுத்தியது. சாட்சி சட்டத்தின் 24வது பிரிவு, 8வது பிரிவை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 8வது பிரிவின்படி பாதிக்கப்பட்டவர் தலித், குற்றஞ்சாட்டப்பவர் தலித் அல்லாதவர், இவர்களுக்கு இடையில் ஒரு கொலைக்கான மோட்டிவ் இருந்தால் போதும்.

அதை நிரூபித்தால் கொலை வழக்கில் தண்டனை வழங்கலாம். அதை அரசு தரப்பு நிரூபணம் செய்துள்ளது. பல வழக்குகளில் நேரடி சாட்சியம் இருந்தும் கூட 8வது சட்ட பிரிவை கோர்ட் ஏற்றுக்கொண்டது இல்லை. ஆனால் இந்த வழக்கில் இந்தியாவிலேயே முதல்முறையாக கோர்ட்டில் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

அதோடு நீதிபதிகள் நேரடியாக சென்று விசாரணை செய்ததும், மலையில் அவர்கள் ஆய்வு செய்ததும் முக்கியம். மின்னணு சாட்சியங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், ஊடகங்களில் வரும் செய்திகள் எப்படி வழக்கை மாற்றும் என்பதையும் இந்த வழக்கின் தீர்ப்பு காட்டி உள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கும் வாழ்நாள் முழுக்க தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை மதுரை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் கையில் எடுத்தது.

சிறப்பு நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை கொடுத்து இந்தியாவில் முதல்முறை. அதையும் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தீர்ப்பு இது, என்று வழக்கறிஞர் மோகன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+