ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் இருந்த தங்கம்,வைர நகைகள் கொள்ளை.. யார் மீது சந்தேகம்.. புகார்
சென்னையில் நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல லட்சம் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வீட்டு லாக்கரில் இருந்த தங்கம், வைர நகைகள் திருடு போய் விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிந்ததை அடுத்து ஐஸ்வர்யா தனது மகன்களுடன் தேனாம்பேட்டையில் தனியாக வசித்து வருகிறார்.

லால் சலாம்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். திரைப்பட தயாரிப்பு பணியில் பிசியாக உள்ளார் ஐஸ்வர்யா

நகைகள் திருட்டு
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் நவரத்தின கற்கள் தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

60 சவரன் நகைகள் கொள்ளை
நெக்லஸ்கள், ஆரம், வைர நகைகள் உள்ளிட்ட 60 சவரன் நகைகள் திருடுபோயிருப்பதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார். வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை
நகைகள் திருடு போன சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு மூன்று வீடுகள் மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா. அவரது வீட்டில் யார் யார் வேலை செய்து இருக்கின்றனர். லாக்கர்கள் பற்றிய விபரம் யாருக்கு தெரியும்? எந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications