Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Bonds: தங்க பத்திரம் திட்டம் சிறந்த சேமிப்பு.. நகைக்கு மாற்றாக பட்ஜெட் 2026ல் மீண்டும் வருமா? மக்கள் ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பட்ஜெட் வரப்போகிறது.. வருமான வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எதிர்பார்ப்புகள் கூடிவருகின்றன... அந்த வகையில் தங்க பத்திர சேமிப்பு திட்டத்தை பற்றின எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.. பட்ஜெட்டில் அதற்கான சாத்திய கூறுகள் இருக்குமா? அப்படி அறிவிப்பு வெளியானால், இந்த திட்டத்தினால் கிடைக்ககூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

தங்க பத்திரம் சேமிப்பு திட்டம் என்பது ஒரு சேமிப்பு வழியாகும்... பொதுவாக தங்க நாணயம், தங்கக்கட்டி, தங்க நகை என்று வாங்கி வீட்டில் பலரும் வைத்திருப்பார்கள். அதற்கு பதிலாக, தங்கத்தை காகிதம் அல்லது டிஜிட்டல் வடிவில் சேமிக்கலாம் என்பதற்காகவே இப்படியொரு திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் பணம் செலுத்தினால், அதற்கு சமமான தங்க மதிப்பில் பத்திரம் வழங்கப்படும்... அதாவது நிஜமான தங்கம் கையில் கிடைக்காது. ஆனால் தங்கத்தின் விலை உயர்ந்தால், அதற்கேற்ப பணமாக லாபம் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் முக்கிய ஸ்பெஷாலிட்டியே, தங்கத்தின் விலை உயர்வால் கிடைக்கும் லாபத்துடன் சேர்த்து, ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் கிடைக்கும் என்பதுதான்..

தங்க பத்திரம் திட்டத்தின் பலன்கள், பயன்கள்

அதுமட்டுமல்ல, இந்த பத்திரங்களை 8 ஆண்டுகள் வரை வைத்திருந்தால், முடிவில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கட்ட தேவையில்லை... அதனால்தான் பாதுகாப்பான முதலீடாக தங்க பத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் மக்கள் உடல் தங்கம் வாங்குவதை குறைத்து, சேமிப்பு பழக்கத்தை மாற்றும் முயற்சி ஒரு அளவு வெற்றி பெற்றது.

ஆனால் இப்போது இந்த தங்க பத்திரம் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த புதிய தங்க பத்திரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பிப்ரவரி 2024ல் வெளியான சீரிஸ் தான் கடைசியாக வந்த பத்திரமாகும். ஏற்கனவே வாங்கியவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புதிதாக முதலீடு செய்ய விரும்புவோருக்கு சான்ஸ் கிடைக்கவில்லை..

தங்கம் விலை

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் 2026 இன்னும் சில நாட்கள்தான் உள்ளது.. அதனால் எப்படியாவது தங்க பத்திரம் திட்டம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

காரணம், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால், மக்கள் நேரடியாக தங்கம் வாங்குவது என்பது நினைச்சுகூட பார்க்க முடியாத விஷயமாகிவிட்டது.. அப்படிப்பட்ட நேரத்தில், தங்க பத்திரம் திட்டம் மீண்டும் வந்தால், சிறு முதலீட்டாளர்களுக்கும் தங்கத்தில் சேமிப்பு செய்ய ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

தங்க பத்திரம் சேமிப்பு

அதுமட்டுமல்ல, மக்கள் தங்கத்தை நகையாக வாங்குவதற்கு பதிலாக, தங்க பத்திரங்களில் முதலீடு செய்தால், நாட்டிற்கு தங்க இறக்குமதி குறையும், இதனால் அரசுக்கும் பலன் கிடைக்கும். வீட்டில் தங்கம் வைத்திருக்கும்போது திருட்டு பயம் இருக்கும்.. அதற்கென பிரத்யேக காவல், பூட்டு என பாதுகாப்பு விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.. ஆனால் தங்க பத்திரங்களில் இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை.

அதேபோல தங்கத்தின் விலை உயர்ந்தால் கிடைக்கும் லாபத்துடன் சேர்த்து ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும் என்பதால், இது சாதாரண தங்க வாங்குவதைவிட நல்ல சேமிப்பாக மாறும். அதேபோல தங்க பத்திரம் வழியாக முதலீடு செய்தால், அது ஒரு நிதி சேமிப்பாக மாறும்..

அரசும், தங்க பத்திரம் மூலம் மக்களிடமிருந்து பணம் திரட்டி, அதை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். இது அரசுக்கு ஒரு மாற்று கடன் திரட்டும் வழியாகவும் செயல்படும்...

மீண்டும் நடைமுறைக்கு வருமா

எனினும் அரசு தரப்பில் ஒரு கவலையும் உள்ளது. தங்கத்தின் விலை எகிறி கொண்டிருக்கும் இந்த காலத்தில், அரசு தங்க பத்திரங்கள் மூலம் கடன் வாங்கினால், எதிர்காலத்தில் அதிக தொகையை திருப்பித் தர வேண்டிய நிலை வரும்... இதனால் அரசுக்கு நிதிச் சுமை அதிகரிக்கலாம் என்பதுதான் அரசின் தயக்கம்.

ஆனாலும் தங்க பத்திரம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுமா, இல்லையா என்பது குறித்து அரசு இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. சந்தை நிலவரம், தங்க விலை, அரசின் நிதி நிலை போன்றவைகளை பார்த்த பிறகே முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இருந்தாலும் நடுத்தர மக்களின் சேமிப்புக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், பட்ஜெட் 2026 இல் இது மீண்டும் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+