நட்சத்திர ஓட்டலில் வயதான தொழிலதிபர்களுடன் உல்லாசம்.. தீபிகா யார் தெரியுமா? ஆடிப்போன சென்னை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டார் ஓட்டலில் ஆண் நண்பருடன் மது அருந்திய தீபிகாவை போலீசார் கடந்த 4 நாட்களாகவே வலைவீசி தேடி கொண்டிருந்தனர்.. இந்நிலையில், நேற்றைய தினம் தீபிகா குன்றத்தூரில் கைதானார்.. அவரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டதில் பல பகீர் தகவல்களை தீபிகா வாக்குமூலமாக சொல்லி உள்ளார். இந்த செய்திதான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையை அடுத்த ஆவடி பகுதியை சேர்ந்தவர் மணி.. தொழிலதிபரான இவருக்கு 47 வயதாகிறது.. அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில், வாரம் 2 நாள் செல்வது இவரது வழக்கம்.

அப்படித்தான், கடந்த 27ம் தேதியும், அதே ஓட்டலிலுள்ள மதுபாரில் மது அருந்தியுள்ளார்.. அப்போது அவருக்கு அறிமுகமான தீபிகா என்ற பெண்ணும், அதே பாருக்கு வந்துள்ளார்.. மணி அங்கு மது அருந்தி கொண்டிருந்ததால், அவரிடம் சென்று பேசியிருக்கிறார்.. பிறகு இருவருமே சேர்ந்து மது அருந்திவிட்டு, அதே ஓட்டலில் 104 என்ற ரூமில், இரவு தங்கி, உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

தொழிலதிபர் மணி

மறுநாள் காலை 10 மணிக்குத்தான் தொழிலதிபர் மணி போதையிலிருந்து கண் விழித்தார்.. அப்போதுதான், கழுத்தில் 10 சவரன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ந்தார்.. ரூமில் தங்கியிருந்த தீபிகாவையும் காணவில்லை. இதனால் தீபிகாவுக்கு போன் செய்துள்ளார்.. ஆனால், போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. எனவே, தேனாம்பேட்டை போலீசில் நகை காணவில்லை என்று புகார் தந்தார் மணி.

இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட ஸ்டார் ஓட்டலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து, தீபிகா எங்கே என்று தேட துவங்கினார்.. அவரை பிடித்தால்தான், 10 பவுன் நகை குறித்த உண்மை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆண் நண்பர்கள்

இந்நிலையில், தீபிகாவை நேற்று போலீசார் கைது செய்தனர்.. தீபிகாவின் அப்பா சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் திருமணமாகாத தீபிகா குடும்பத்தைவிட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. பல ஆண்களுடன் தீபிகாவுக்கு தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.. அவர்களிடம் நெருங்கி பழகுவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர் தீபிகா என்பது தெரியவந்தது.

தீபிகாவை போலீசார் கைது செய்திருந்த நிலையில், மணியின் தங்க செயின் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அப்போதுதான் பல்வேறு தகவல்களை போலீசில் இன்று தீபிகா தெரிவித்திருக்கிறார்..

வயதான தொழிலதிபர்கள்

அதாவது 23 வயதாகும் தீபிகாவின் நிஜப்பெயர் தீபலட்சுமி.. குன்றத்தூர் சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த தீபிகாவுக்கு திருமணமாகிவிட்டதாம்.. ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.. ஆனால், மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற 23 வயது இளைஞருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது..

இதையறிந்த கணவர் அதிர்ச்சியடைந்து, தீபிகாவை விட்டு விலகி சென்றுவிட்டார்.. எனினும் குழந்தையை வைத்திருப்பது தீபிகாவுக்கு இடைஞ்சலாகவே இருந்துள்ளது.. அதனால் தன்னுடைய குழந்தையை சகோதரனிடம் விட்டுவிட்டு, கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் திருமணம் செய்யாமலேயே ஊர் சுற்றி வந்துள்ளார்..

பிரபல நட்சத்திர ஓட்டல்

வழக்கமாக, சதீஷ்குமாருடன் இணைந்து வார இறுதி நாட்களில் தீபிகா பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வந்து பாரில் மது அருந்துவாராம்.. அப்போதுதான், பாருக்கு வரும் வயதான தொழிலதிபர்களை நோட்டமிட்டு, அவர்களிடம் பேச்சு தருவாராம்..

தொழிலதிபர்கள் அளவுக்கு அதிகமாக குடித்து போதை தலைக்கேறியதும், அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து, இன்னும் நெருக்கமாகிவிடுவாராம்.. பிறகு தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி, அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, பிறகு பணம், நகைகளையும் அவர்களிடம் பறித்து தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்..

நகை, பணத்தை இழந்த தொழிலதிபர்கள் பலரும், தங்களது கவுரவம் சமூகத்தில் பாதிக்கப்படும் என்பதால் தீபிகா மீது புகார் அளிக்காமல், ஒதுங்கிவிட்டனர்.. இதுவே தீபிகாவுக்கு மேலும் தைரியத்தை தந்துவிட்டது. அப்படித்தான் 47 வயதான தொழிலதிபர் மணியும் சிக்கியிருக்கிறார்.

அடகு கடையில் நகை

தீபிகாவும், கள்ளக்காதலனும் சேர்ந்தே தொழிலதிபர் மணியை மயக்கி அவருடன் உல்லாசமாக இருந்து 10 சவரன் செயினை பறித்தார்களாம்..

நகையை பறித்த தீபிகா, உடனே அதனை அடகு கடையில் வைக்க சென்றுள்ளார்.. ஆனால், நகைக்கடைக்காரருக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, "அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. மருத்துவமனையில் சீரியஸாக உள்ளார்.. ஆப்ரேஷன் செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால் நகையை விற்கிறேன்" என்று சொல்லி அடகு வைத்துள்ளார்.. 10 சவரன் நகைக்கு ரூ.6 லட்சம் பெற்றுள்ளார்..

நகைகள், பணம் மீட்பு

இந்த 6 லட்சம் பணத்தில், கள்ளக்காதலன் சதீஷ்குமாருக்கு விலை உயர்ந்த 'கேடிஎம் டியூக்’ பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார். மிச்ச பணத்தை 2 பேருமே செலவு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.. இவ்வளவும் இன்று நடத்திய விசாரணையில் தீபிகா வாக்குமூலமாக சொல்லி உள்ளார்.

இப்போது தீபிகா, சதீஷ்குமார் இருவருமே கைதாகி உள்ளனர்.. நகை விற்ற பணத்தில் பைக் வாங்கியது மற்றும் செலவு செய்தது போக மீதமிருந்த ரூ.3,14,700 பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. அதேபோல, திருட்டு நகையை வாங்கிய அடகுக்கடை உரிமையாளரிடம் 10 சவரன் செயினும் மீட்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+