தோண்டத் தோண்ட தங்கப் புதையல்.. ஜவ்வாது மலை கோயிலில் அசந்துபோன மக்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள கோவிலூர் சிவன் கோயிலில், சிதிலமடைந்த கருவறையை மீண்டும் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணியின்போது தங்கக்காசு புதையல் கிடைத்துள்ளது. தோண்டத் தோண்ட தங்கக் காசுகள் கிடைத்துக்கொண்டே இருந்ததால் தொழிலாளர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
ஜவ்வாது மலையில் உள்ள கோவிலூர் சிவன் கோயில், மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் கருவறை, ராஜகோபுரம் உள்ளிட்டவை சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது, கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. கருவறை பணிக்காக பள்ளம் தோண்டியபோது, தோண்டத் தோண்ட தங்கக் காசுகள் கிடைத்துள்ளன.

மொத்தம் 103 தங்க காசுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்க புதையலை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துs சென்றனர். அந்த காசுகள் எந்த காலத்தை சேர்ந்தவை? அவற்றின் வரலாற்று தகவல்கள் தொடர்பான ஆய்வு செய்ய உள்ளனர். ஜவ்வாது மலை கோயில் கருவறையில் தங்க காசுகள் கிடைத்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications