தங்கத்தின் மதிப்பு மட்டுமல்ல.. முதன்முறையாக வங்கிகளின் தங்க நகைக்கடனும் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது
சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து 1 சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளில்
தங்க நகைக்கடன் வினியோகம் குறித்த தககூல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நம்முடைய நாட்டில் தங்கத்திற்கென்று தனி மதிப்பு அனைத்து காலத்திலும் இருந்து வருகிறது.. எனினும், உலக பொருளாதாரத்தின் நிலைமை, தங்கத்தின் தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கம் நிலையில் தினசரி அடிப்படையில் மாறுதல் ஏற்பட்டு வருகின்றன.

தங்கம் நகை மதிப்பு
எனினும், தேவைப்படும் நேரங்களில், அந்த தங்கத்தை பணமாகவும் மாற்றி பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதால், தங்கத்தின் மதிப்பு எப்போதுமே குறையாமல் உள்ளது. பொதுமக்களுக்கு அவசரத்துக்கு பணத்தேவை இருக்கிறதென்றால் வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறையும் உள்ளது.
பொதுவாக தங்க நகைக்கடனை வங்கியில் பெறுவதற்கு பெரிய அளவிலான நிபந்ததனைகள், விதிமுறைகள் கிடையாது.. மற்ற கடன்களை விடவும் தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகும். ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப வட்டி விகிதம் மாறினாலும், அந்தந்த வங்கிகளில் வட்டி விகிதம் இந்தக் கடனுக்குத் தான் குறைவாக இருக்கும்.
நகைக்கடன் வங்கி
எனவேதான், தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கடன் எளிதாகவும், விரைந்தும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில்கூட, கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு அதிக தொகை கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்க, கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் சமீபத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், நகைக் கடனுக்கு கிராமுக்கு 7,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அடமானம் தங்க நகைகள்
தங்கம் விலை தினம் தினம் ஒருபுறம் உயர்ந்து கொண்டே போக, மறுபுறம் வங்கிகளில் தங்க நகையை அடமானமாக வைத்து கடன் வாங்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்நிலையில், இந்தியாவின் வங்கிகள் வழங்கிய தங்க நகைக்கடன்களின் மதிப்பு, நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரூ.1 லட்சம் கோடி தாண்டியது
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், வங்கிகளின் தனிநபர் கடன் பிரிவில், முதல்முறையாக தங்க நகைக்கடன் வினியோகம், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது.. இந்த முதல் அரையாண்டில், வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் 51 சதவீதம் அதிகரித்து, 1,07,307 கோடி ரூபாயாகின.
கடந்த வருடம் இதே காலத்தில் வழங்கப்பட்ட 44,519 கோடி ரூபாய் நகைக்கடனோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 43 சதவீதம் அதிகமாகும்.
வங்கிகளில் ஒரு அரையாண்டில் 1 லட்சம் கோடி நகைக்கடன் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.. தங்கத்தின் விலை மதிப்பு உயர்வது, பாதுகாப்பான கடன்களுக்கு வங்கிகள் முக்கியத்துவம் தருவது போன்றவையே தங்க நகைக்கடன் மதிப்பு உயர காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்..!!
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications