தங்கத்தை "பொறி" வைத்த தம்பதி.. தங்க நகைக் கடைக்குள் ஒரே சிரிப்பு.. டெல்லியில் கண்ணை உறுத்திய கம்மல்
சென்னை: கடந்த 2 நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.10,700-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர, ஏழை மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்..
இதற்கு நடுவில், தங்க கடத்தல்கள், தங்க நகை திருடு, நகைக்கடை கொள்ளைகள் என பகீர் சம்பவங்களும் பெருகி வருகின்றன. அந்தவகையில், டெல்லியில் நடந்துள்ள சம்பவத்தை பாருங்க
டெல்லியில் சமீப காலமாகவே கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.. அதிலும் தங்க நகைக்கடைகளில் தொடர் கொள்ளைகள் நடந்து பேரதிர்ச்சியை தந்து வருகின்றன..

குறிப்பாக, புராரி, பஸ்சிம் விஹார், ஐஎஸபிடி மார்க்கெட், லஜ்பத் நகர், கான் மார்க்கெட் மற்றும் துவாரகா போன்ற இடங்களில், கடந்த 5 மாதங்களாகவே நகை திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.. இதில் நகைக்கடைகளில் நடந்த கொள்ளைகள் அதிகம்.. அதாவது, குறுகிய காலத்தில் மட்டும் மொத்தம் 7 நகைக்கடைகளில் திருட்டு நடந்துள்ளது..
தங்கம் நகைகள்
இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள், அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார்களை கொண்டு சென்றார்கள்.. போலீசாரும் அந்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது.. இதில் திருட்டு நடந்த நகைக்கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்தவகையில், கடந்த ஜூலை மாதம் துவாரகாவில் உள்ள ஒரு நகைக் கடையில் நடந்த திருட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தியபோது, கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், அங்கிருந்த நகைக்கடைகளில் ஒரு ஆணும், பெண்ணும் உள்ளே வந்து செல்வது பதிவாகியிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர்..
தங்க நகைக்கடைகள் - டெக்னிக்
அவர்கள் 2 பேரும் நகை வாங்குவதுபோல, ஒவ்வொரு நகைக்கடைக்கும் சென்று, அங்கு நகைகளை சுருட்டி கொண்டு தப்பி சென்றிருப்பது கேமராக்களில் பதிவாகியிருந்தது..
இவர்கள் இருவருமே கணவன், மனைவி ஆவர்.. நகையை திருடுவதற்கென்றே சில ஐடியாக்களை கையில் எடுத்து, செயல்படுத்தி வந்துள்ளனர்..
அதாவது நகைக்கடைக்குள் நுழைந்ததுமே, கடைக்காரர்களிடம் கணவன் சுவாரஸ்யமாக பேச ஆரம்பித்துவிடுவாராம்.. மனைவியோ நகை டிசைன் பார்க்க துவங்கிவிடுவாராம்.. நகைக்கடைக்காரர்களிடம் சுவாரஸ்யமாக பேசி, அவர்களின் கவனத்தை கணவர் திசை திருப்புவார்.. அந்த நேரம் பார்த்து, மனைவி, நகைகளை திருடி தன்னுடைய பைக்குள் மறைத்து கொள்வாராம்.. பிறகு டிசைன் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, இன்னொரு நகைக்கடைக்கு சென்றுவிடுவார்களாம்..
ஜோடியாக சிக்கிய திருட்டு தம்பதி
இப்படியே அனைத்து கடையிலும் இதே யுக்தியை தம்பதி இருவரும் பின்பற்றி வந்துள்ளனர்.. அதேபோல தங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, செல்போன் நம்பர்களை மாற்றி வந்துள்ளார்கள்.. அதுமட்டுமல்ல, தங்களது தோற்றத்தையும் மாற்றி கொண்டுவிடுவார்களாம்..
இந்த கேமரா பதிவுகளை வைத்து அந்த தம்பதி யார் என்று விசாரிக்கப்பட்டது.. அவர்கள் அமிர்தசரஸை சேர்ந்த 35 வயது ராஜீவ், அவரது 34 வயது மனைவி சன்யா என்பது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, இருவரின் நடமாட்டத்தையும் சைபர் கிரைம் போலீஸ் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தற்போது தம்பதி இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்..
கம்மல், தங்க மோதிரம்
அவர்களிடமிருந்து ஒரு தங்க மோதிரம், ஒரு ஜோடி தங்கக்கம்மல், ஒரு லாக்கெட் மற்றும் 8,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.. அப்போதுதான், தம்பதி இருவருமே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது..
பஞ்சாபில் பல நகைக் கடைகளில் இப்படி நகைகளை திருடிவிட்டு, அங்கிருந்து தப்பித்து டெல்லிக்கு வந்துவிட்டார்களாம்.. சமீப காலமாக டெல்லியிலேயே தங்கி குடியிருந்து, அங்குள்ள நகைக் கடைகளை குறிவைத்து திருடி வந்ததாக வாக்குமூலம் தந்திருக்கிறார்களாம்.. மாநிலம் விட்டு மாநிலம் கொள்ளை அடிப்பதையே தொழிலாக வைத்திருப்பதால், தம்பதியிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications