எழுத்தாளர் ஜெயகாந்தன் மகள் வீட்டில் 31 பவுன் நகைகள் திருட்டு.. பணிப்பெண் கைது.. விசாரணையில் பகீர்!
சென்னை: சென்னையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் வீட்டில் 31 பவுன் நகைகள் திருட்டு போன வழக்கில் பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன்... மிகுந்த ஆற்றல் மிக்க படைப்பாளி. இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞானபீட விருதை பெற்றுள்ள இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவர் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

இவரை இலக்கிய ராட்சசன், எழுத்துலக அரசன் என அழைக்கிறார்கள். இவர் யாரிடம் எழுத்துத்திறமை இருந்தாலும் அவர்களை பாராட்டமல் இருக்க மாட்டார். இவருடைய எழுத்தில் புரட்சி, புதுமை, யதார்த்தம் என இருக்கும்.
உன்னை போல் ஒருவன், யாருக்காக அழுதான்,புதுசெருப்பு கடிக்கும் உள்ளிட்ட பல படைப்புகளை படைத்துள்ளார். இவருடைய மகள் தீபலட்சுமி. இவருடைய கணவர் அலோசியஸ் ஜோசப். இவர் பிரபல நிதி நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டில்தான் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஜோசப் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் 4 ஆண்டுகளாக வீட்டில் பணிபுரியும் சுமித்ரா என்ற பெண்தான் நகைகளை திருடினார் என்பது தெரியவந்தது.
அந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அப்போது நகைகளை திருடியதாக ஒப்புக் கொண்டார். 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியாததால் கொஞ்சம் கொஞ்சமாக திருடியதாகவும் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு அவற்றை விற்று பணம் கட்டியதாகவும் சுமித்ரா தெரிவித்துள்ளார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications