முழு பணத்தை கட்டினால் தான் நகையை திருப்ப முடியும்.. உத்தரவு இன்னும் வரவில்லை.. மறுக்கும் வங்கிகள்
சென்னை: சென்னையின் (gold loan RBI New rules ) புறநகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கு வட்டி மட்டும் கட்டிவிட்டு திருப்பி வைக்க வந்த பெண் ஒருவர், வேறு வழியில்லாமல் ஏமாற்றம் அடைந்தார். ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய உத்தரவுகள் குறித்து கேட்ட போது இன்னும் தங்களுக்கு வரவில்லை என்று வங்கி ஊழியர் ஒருவர் கூறினார். விரைவில் புதிய சுற்றறிக்கையை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சுற்றறிக்கை அமலுக்கு வரும் போது, நகைக்கு முழு பணத்தையும் கட்டி திருப்பி வைக்கதேவையில்லை.
தங்கத்தின் விலை 72 ஆயிரம் என்கிற அளவில் விற்பனையாகிறது. தங்கம் விலை வெறும் ஓராண்டில் தங்கம் விலை 20 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. நகை விலை அதிகரித்தாலும், எப்படியாவது நகை வாங்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் குறையவே இல்லை.. என்ன விலை விற்றாலும் பெட்ரோலை எப்படி மக்கள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்கிற நிலை உள்ளதோ, அதேபோல் தங்கம் என்ன விலை விற்றாலும் வாங்கி சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மக்களிடம் ஆழமாக உள்ளதே காரணம் ஆகும். ஏனெனில் பெண்களுக்கு வழங்கப்படும் சீராக தங்கம் உள்ளது. தங்கம் இல்லாத திருமணத்தை பார்க்கவே முடியாது. தங்கம் தான் பெற்றோர் வீட்டில் இருந்து பெண்களுக்கு தரப்படும் பெரிய சீதனமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகம்
தங்கத்தை மட்டும் எளிதாக அடகு வைத்து பணம் புரட்ட முடியும். எளிதாக விற்று பணமாக்க முடியும் என்பது ஒரு காரணம் என்றால், தங்கத்தை சேமித்து வைத்தால், அதன்விலை உயரும் என்ற நம்பிக்கையும் காரணம் ஆகும். அதை உறுதி செய்யும் வகையில் இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது.
வட்டிக்கு விட பயன்படுத்துதல்
தங்கத்தை வைத்து கடன் வாங்கி தொழில் செய்பவர்கள் இங்கு இருக்கிறார்கள். தங்கம் இருந்தால் போதும், பள்ளி கட்டணம், மருத்து செலவு என எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துவிடும். இப்படி அருமருந்தாக உள்ள தங்க நகைக்கடனுக்கு கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. சிலர் தங்கம் வாங்கவே தங்கத்தை அடகு வைப்பது, மீட்பது, மறுபடியும் வைப்பது என பலமுறை தங்கத்தை முதலீடு போல் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் சிலர் தங்கத்தை அடகு வைத்து கடன் பெற்று அதனை வேறு நபர்களுக்கு கந்து வட்டிக்கு விடுகிறார்கள். தங்க நகைக்கடனை தவறாக பயன்படுத்துவது நடந்தது.
நகை மதிப்பீடு
இதேபோல் வங்கிகளும் ஏலத்தில் விடுவதில் சில தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் வங்கிகளில் தங்க நகை மதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில், தங்கத்தை வைத்து கடன் பெறுவதில் ரிசர்வ வங்கி நகைக்கடன் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், வட்டி அசலை முழுமையாக கட்டிய பின்னரே திருப்ப முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.
புதிய கட்டுப்பாடு
அதேபோல் தங்க நகை கடனுக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து புதிய வரைவு அறிக்கையை கடந்த மாதம் ரிசர்வ் வெளியிட்டது. அதில் தங்க நகை மதிப்பில் 75 சதவீதம் தான் கடன் வழங்க வேண்டும் என்றும் நகை உரிமைக்கான ஆதாரத்தை (பில்) வழங்க வேண்டும். அதாவது நகை வாங்கிய பில்லை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மத்திய அரசு உடனே தலையிட்டு புதிய உத்தரவை நிறுத்திவைக்க அறிவுறுத்தியது.
ரிசர்வ் வங்கி
இதனை ஏற்று ரிசர்வ வங்கி தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை அண்மையில் வெளியிட்டது. அதன்படி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவீதம் கடன் பெறமுடியும். மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 80 சதவீதமும், ரூ.5 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு நகை மதிப்பில் 75 சதவீதமும் பொதுமக்கள் இனி கடன் பெற முடியும் .
வட்டியை மட்டும் கட்டலாம்
அதே போல் நகை உரிமைக்கான ஆவணத்தை கேட்க வேண்டும் என்ற நிபந்தனை இனி இல்லை. அதே போல ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு உட்பட்ட கடன் வழங்குவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை. 90 சதவீதத்திற்கு கீழான மதிப்பில் நகைகளை ஏலம் விடக்ககூடாது. வழக்கம் போல் ஒரு ஆண்டுக்கு பிறகும் நகைகடனை வட்டியை கட்டியோ அல்லது கூடுதல் நகைகடன் பெற்றோ புதுப்பித்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
ரிசர்வ் வங்கி உத்தரவு
ஆனால் நடைமுறைக்கு இந்த உத்தரவு வந்துவிட்டதா என்று பார்த்த போது, அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெரிந்தது. தாம்பரத்தை அடுத்த புறநகர் பகுதியில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் பெண் ஒருவர் வட்டியை மட்டும் கட்டி நகையை திருப்பி வைக்க வந்தார். ஆனால் அவரை முழு பணத்தையும் கட்டினால் தான் நகையை மறுஅடகு வைக்க அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். இல்லை என்றால் வேறு நபர்களின் பெயரில் தான் வைக்க முடியும் என்று கூறினார்கள். இதனால் அந்த பெண் ஏமாற்றம் அடைந்தார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications