தங்கத்தை நம்பி கடன் கொடுத்தா.. தெருவுல தான் போகனும்! லோன் கட்டாமல் பதுங்கும் மக்கள்! எச்சரிக்கை மணி!
சென்னை: இந்தியாவில் தங்க நகை அடமான கடன் (கோல்டு லோன்) பெறும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தாதோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக olan TransUnion CIBIL வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரித்துள்ளது. குறிப்பாக அதிக தொகை கடன் பெற்றவர்களிடையே தவணை செலுத்தாத நிலை அதிகரித்திருப்பது நிதி துறைக்கு "எச்சரிக்கை மணி" என பார்க்கப்படுகிறது.
வங்கி மற்றும் வங்கியல்லாத நிறுவனங்களுக்கு கடன் தகவல் தரும் நிறுவனமான ஒலன் ட்ரான்ஸ்யூனியன் சிபில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ₹2.5 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களிடையே தவணை செலுத்தாதோரின் விகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, ₹2.5 லட்சத்திற்கு மேல் நிலுவையில் கடன் வைத்திருப்பவர்களில் 1.5 சதவீதம் பேர் தவணைகளை சரியாக செலுத்தாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த தொகை கடன் பெற்றவர்களை ஒப்பிடும்போது சுமார் 2 மடங்குக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஒரே நபர் ஐந்துக்கும் மேற்பட்ட கடன்களை எடுத்திருந்தால், அவர்களிடையே தவணை செலுத்தாதோர் விகிதம் 1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பல இடங்களில் கடன் எடுத்து, அதிக கடன் சுமையை ஏற்றுக் கொள்வது ஒரு புதிய சிக்கலாக உருவாகி வருவதை காட்டுகிறது. இந்த அறிக்கையின் படி, ஒருவருக்கு சராசரியாக உள்ள தங்க நகை கடன் தொகை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
2022 டிசம்பரில் ஒருவருக்கு சராசரி ₹1.9 லட்சம் கடன் இருந்த நிலையில், தற்போது அது ₹3.1 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களின் வருமானத்தை விட அதிக கடன் எடுக்கும் நிலை உருவாகி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் தங்க நகை கடன் துறை வேகமாக வளர்ந்து வருகிறது.
2022 மார்ச் மாதத்தில் மொத்த சில்லறை கடன்களில் 5.9 சதவீதமாக இருந்த தங்க நகை கடன், 2025 டிசம்பர் மாதத்துக்கு 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்க நகை கடன் துறை தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய சில்லறை கடன் துறையாக மாறியுள்ளது. இந்நிலையில், தங்க நகை கடன் வழங்கும் நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, கடன் வழங்கும் போது உரிய ஆய்வு செய்யாமல் கடன் வழங்குதல், நகைகளை ஏலத்தில் விடும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சிறு வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார சிக்கல்களில் சிக்கும்போது அதிகமாக தங்க நகை கடன்களை நம்பி இருப்பதும் ஒரு கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் தங்கத்தின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்தால், கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு மேலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் தங்கத்தின் மதிப்பு குறைந்தால், கடன் தொகையை மீட்க நகைகளை ஏலத்தில் விட வேண்டிய நிலை அதிகரிக்கலாம். தற்போது பல நிதி நிறுவனங்கள், குறிப்பாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) தங்களிடம் அடமானமாக உள்ள தங்க நகைகளை ஏலத்தில் விடுவதன் மூலம் கடன் தொகையை மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றன.
ஆனால் இந்த ஏல நடைமுறைகளும் தற்போது கட்டுப்பாட்டு அமைப்புகளின் கண்காணிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்க நகை கடன் பெறுவது அதிகரித்து வரும் நிலையில், அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவாகுவது நிதி துறைக்கும், பொதுமக்களுக்கும் எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications