Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க நகைக்கடன் ஓகே, ஆனால் நகை கடையெல்லாம் டல்லடிக்குதே.. தங்கம் விலையால் புலம்பும் வியாபாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச காரணங்கள், பண்டிகை கால தேவை அதிகரிப்பு போன்றவற்றால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.. நேற்றுகூட தங்கம் விலை உயர்ந்துவிட்டது.. தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், நகைக்கடைகளில் கூட்டமே இல்லாமல் வியாபாரம் மந்தமாகவே காணப்படுகிறது. இதுகுறித்து நகை வியாபாரிகள் சொல்வதென்ன தெரியுமா?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 2,400 ரூபாய் அதிகரித்து, 97,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட லட்சம் ரூபாயை 1 சவரன் தங்கம் எட்டிவிடும் நிலைமையில் உள்ளது. எப்படியும் தீபாவளி அன்று தங்கம் பவுன் ஒரு லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gold price Diwali jewellery sales Chennai jewellery shops

தங்கம், வெள்ளி விலை

ஆனால், வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.3 குறைந்துகிராம் வெள்ளி ரூ.203க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து, பார்வெள்ளி 2 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

தங்கம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த உலோகங்கள் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் நிதி பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.. இதெல்லாம்தான், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள்.

நாணய மாற்றங்கள்

நாணய மாற்றங்களில் ஏற்பட்ட பதிலியல் மாற்றங்களும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன.. உலகளவில் தங்கம் விலை உயர்ந்து வருவது, இந்திய சந்தைக்கும் நேரடியான தாக்கத்தை உண்டுபண்ணி வருகிறது.

தங்கத்தின் அதிக விலையால், பொதுமக்கள் மட்டுமல்லாமல், ஆபரண தொழிலாளர்கள், நாணய முதலீட்டாளர்களும் கையை பிசைந்து நிற்க வேண்டிய நிலைமை வந்துள்ளது..

புதிய உச்சத்தில் தங்கம்

மேலும் தற்போது தீபாவளி பண்டிகை என்பதாலும், சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்திற்கு வந்துள்ளதாக காரணம் சொல்லப்படுகிறது.. இதனால், தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறதாம். அதாவது, 25 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக, தங்கம் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

தமிழ்நாடு நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் முக்கிய ஆலோசகர் எல்.கே.எஸ்.சையது அகமது இதுகுறித்து ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், தங்கத்தின் விலையேற்றம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. நகை வியாபாரிகள் மட்டும் இதனால் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.. நிச்சயம் கிடையாது.. பல கோடிகள் அதில் முடக்கி அதை விற்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்' என்றார்.

தீபாவளி விற்பனை மந்தம்

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்கள், தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.. தமிழகத்தின் ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகை கடைகளில் நெக்லஸ், வளையல், பேன்சி கொலுசுகள் உள்ளிட்டவைகளை பெண்கள் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

வழக்கமாக தீபாவளி நேரத்தில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும்.. ஆனால், நகைக்கடைகள் பெரும்பாலும் காலியாக உள்ளதுடன், பேன்சி ஸ்டோர்களில் பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு

இதனிடையே, தீபாவளிக்கு தங்கம் வாங்க வேண்டுமானால், அதற்கும் சிறந்த வழியை நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.. அதாவது, ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல், பிரித்து முதலீடு செய்வதால், சராசரி விலையை குறைத்து அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவும். என்கிறார்கள். மேலும், தங்கத்தை தவிர்த்து, பிற முதலீடு திட்டங்களையும் வாங்கலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்,.

முன்னதாக, கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடனுக்கு கிராமுக்கு 7,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.. இதற்கான உத்தரவை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விரைவில் பிறப்பிப்பார் என்றும், நகைக் கடனுக்கான புதிய தொகை, அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும் தங்கம் விலை குறைந்தபாடில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+