தங்க நகைக்கடன் விதிகளில் தளர்வா? ரிசர்வ் வங்கி ஆளுநர் கொடுத்த விளக்கம்!
டெல்லி: தங்க நகைக்கடன் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டது நகல் விதிமுறைகள் தான் என்றும், மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது. தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக்கடனாக வழங்கப்படும், தங்க நகைக்கடன் வாங்குவோர், நகைக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்ற ஆதாரத்தை அளிக்க வேண்டும், தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

தங்க நகைக்கடன் விதிகள்
அதேபோல் நகைகள் இனி 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். தனி நபர்கள் இனி ஒரு கிலோ வரை மட்டுமே நகை அடகு வைக்க முடியும் உள்ளிட்ட 9 புதிய விதிகளை ஆர்பிஐ கொண்டு வந்தது. இந்த விதிகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு என்று சொல்லப்பட்டது. இதற்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
மத்திய அரசு பரிந்துரை
அதேபோல் தமிழக அரசு தரப்பில் மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது. இதன்பின் மத்திய நிதியமைச்சகம் தரப்பில், தங்க நகைக்கடன் விதிகளில் சில தளர்வுகளை அளிக்க பரிந்துரை செய்தது. குறிப்பாக ரூ.2 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ரெப்போ ரேட்டை குறைத்த ரிசர்வ் வங்கி
இதனால் சிறு கடன் வாங்குவோர், அவசர கடன் வாங்குவோருக்கு விரைவில் கடன் கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவிகிதம் குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6ல் இருந்து 5.50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் வீடு, வாகனங்களுக்கான வட்டி குறைய வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
நகைக்கடன் விவகாரம்
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தங்க நகைக்கடன் விவகாரம் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதில், நகைக்கடன் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டது நகல் விதிமுறைகள் தான். மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications