தங்கப்பதக்கம் வாங்கிய பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. ஓயாமல் பேசி, கடைசியில் "அதை" சொன்ன மாப்ளை! கொடுமை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படிப்பு, அந்தஸ்து என அனைத்தும் இருந்தும், ஒரு நபரின் பொறுப்பற்ற வார்த்தைகளால் ஒரு உயர்கல்வி மாணவி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ரெஹானா.. நன்றாக படிக்கக்கூடியவர்.. முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்று, ஆளுநரின் கைகளாலேயே கௌரவிக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

இவருக்கும், பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கைநிறையச் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை, தங்கப் பதக்கம் வென்ற மணமகள் என இரு வீட்டாருமே இந்தத் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
நிச்சயதார்த்தமும் முடிந்தது.. இதனால் ஆரம்ப நாட்களில், மற்ற ஜோடிகளைப் போலவே இவர்களும் செல்போனிலும், வாட்ஸ்அப் மூலமாகவும் அடிக்கடி பேசிக்கொண்டு வந்துள்ளனர்.
முகத்தில் அடித்தாற்போல் சொல்லிட்டாரு
தங்களது வருங்கால திட்டங்கள், கனவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.. இப்படி பேசிகொண்டே இருந்தததால் ரெஹானாவுக்குத் தன்னுடைய வாழ்க்கைத்துணை மீது ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கொஞ்ச நாட்களுக்கு கூட நீடிக்கவில்லை.
திடீரென ஒருநாள் ஷாஜகான் ரெஹானாவை அழைத்து, "எனக்கு உன்னை பிடிக்கல..உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் எந்த உணர்வும் ஏற்படவில்லை.. எனக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு உள்ளது.. அதனால் இந்த திருமண உறவைத் தொடர முடியாது" என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாராம்.
12 பக்கம் லெட்டர்
முதலில் இதை விளையாட்டாகச் சொல்கிறார் என்று நினைத்தாராம் ரெஹானா.. அதற்கு பிறகுதான் போகப்போகத்தான் அது ஷாஜகானின் திட்டமிட்ட மோசடி என்பது புரியவந்தது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், நீதிகேட்டு ஷாஜகானின் பெற்றோரை அணுகியுள்ளார். ஆனால், அவர்களோ தன் மகனைக் கண்டிப்பதற்கு பதிலாக, மகனுக்கே சப்போர்ட் செய்து பேசியதாக கூறப்படுகிறது.
ஊர் அறிய நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இப்போது திருமணம் நின்றால் ஏற்படும் அவமானம் மற்றும் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் ரெஹானா தவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ம் தேதி, மன அழுத்தத்தின் உச்சகட்டத்திற்குச் சென்ற அவர், தனது இல்லத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்பதற்கு முன்னதாக சுமார் 12 பக்கங்களுக்கு ஒரு உருக்கமான கடிதத்தை ரெஹானா எழுதி வைத்துள்ளார்.
தங்கப்பதக்கம் வாங்கிய பெண்
அதில் தனக்கு நேர்ந்த மன ரீதியான சித்திரவதைகள் குறித்தும், தனது மரணத்திற்கு ஷாஜகான் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்றும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஷாஜகான் மற்றும் அவரது பெற்றோர்களான வீரய்யா, வஹீதா ஆகியோரை உடனடியாகக் கைது செய்தனர்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் உறவுகள் எல்லாம் அசால்ட்டாக கையாளப்படுகின்றன.. திருமண பந்தத்திற்குள் நுழையும் முன்பு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பது எவ்வளவு அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் மறுபடியும் உணர்த்தியுள்ளது.
ஒரு தங்கப் பதக்க வெற்றியாளரின் வாழ்க்கை, வெறும் அலட்சியமான வார்த்தைகளால் முடிந்து போனது அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது...!!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications