புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! தீபாவளியை நினைத்தாலே பயந்து வருதே! சென்னையில் விலை என்ன?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது சவரன் ரூ 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இப்படியே போனால் தீபாவளிக்கு ரூ 60 ஆயிரத்தை தாண்டும் என தெரிகிறது.
சென்னையில் அக்டோபர் 26 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 520 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ 59 ஆயிரத்தை எட்டியது. அதாவது சென்னையில் ஒரு சவரன் ரூ 58,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அது போல் சென்னையில் கிராமுக்கு ரூ 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7,360-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ரூ 107 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனை விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட்டின் போது தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அன்றாடம் குறைந்து 50 ஆயிரத்தை தொட்டது. ஆனால் அதன் பிறகு அதிகரித்த நிலையில் தற்போது 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் அக்டோபர் 18 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. ஒரு கிராம் விலை ரூ 7240 க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,920 க்கு விற்பனையானது.
சென்னையில் அக்டோபர் 19ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 320 உயர்ந்தது. இதன் மூலம் கிராம் ஒன்றுக்கு 40 ரூபாயும், ஒரு கிராம் ரூ 7280க்கும் விற்பனை செய்யப்பட்டது. சவரன் ரூ 58 ஆயிரத்தை தாண்டியது. அதாவது ஒரு சவரன் ரூ 58,240-க்கு விற்பனை செய்யப்பட்டதுது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 2 உயர்ந்து கிராம் ஒன்று ரூ 107-க்கும் ஒரு கிலோ 1,07,000 க்கும் விற்பனையானது.
அக்டோபர் 20ஆம் தேதி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 7280-க்கு விற்பனையானது. அது போல் 21 ஆம் தேதி ரூ 20உயர்ந்து ஒரு கிராம் ரூ 7300 க்கு விற்பனையானது. அக்டோபர் 22 ஆம் தேதியும் எந்த மாற்றமும் இல்லை, 23 ஆம் தேதி ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7340 க்கு விற்பனையானது.
அது போல் 24 ஆம் தேதி ரூ 55 குறைந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ 7285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 25ஆம் தேதி கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7292 க்கு விற்பனையானது.
தீபாவளி பண்டிகைக்குள் ரூ 60 ஆயிரத்தை எட்டி விடும் நிலை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு புதிதாக திருமணமான தம்பதிக்கு மோதிரம் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த வழக்கத்தை சாமானிய மக்கள் எப்படி செய்ய போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications