Gold Price: ஒரே ஒரு கிராமாவது வாங்கிப் போடுங்க! சர்ருனு சரியப் போகுது தங்கம் விலை.! அமெரிக்கா பார்த்த வேலை!
சென்னை: சர்வதேச அளவில் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது திடீரென சரிவை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. வரலாறு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சரிய தொடங்கி இருக்கிறது. இதற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி நடவடிக்கை தான் காரணம் என்கின்றனர். தங்கத்தின் விலை தொடர்ந்து சரிய வாய்ப்பு இருப்பதால் தங்கம் வாங்குவது இப்போதைக்கு சிறந்ததாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பு, சர்வதேச போர் பதற்றம் உள்ளிட்ட அவற்றின் காரணமாக டாலருக்கு மாற்றாக தங்கத்தை உலக நாடுகள் தேர்ந்தெடுத்தன.
இதை அடுத்து டாலரின் மதிப்பு சரிந்து நிலையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவு உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் ஒருமுறை வரலாற்று சாதனையை எட்டியது.

அமெரிக்க பெடரல் வங்கி
இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) கூட்டம் தங்கத்தின் விலையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். சொன்னது போலவே பெட்ரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் வெளியிட்ட கருத்துகளுக்குப் பிறகு, தங்க விலை வீழ்ச்சி காண துவங்கியுள்ளது. நேற்று (புதன்கிழமை) சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,707.40 அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில், ரூ.3,25,791) என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் அதன் பின்னர் தங்கம் 0.9% குறைந்து 3,658.25 அமெரிக்க டாலர் அளவுக்கு சரிந்தது.
தங்கம் விலை
அமெரிக்க தங்க பங்குச் சந்தை (Gold Futures) விலையும் 0.2% சரிந்து 3,717.8 டாலராக நிலைபெற்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 6% உயர்ந்த நிலையில் தற்போது சரிவைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவு விலை அதிகரிப்புக்குப் பிறகு ஏன் தங்க விலை வீழ்ச்சி கண்டது என்பது தற்போது முதலீட்டாளர்களிடையே அதிகம் பேசப்படுகிறது. இதற்கு காரணம் அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) எடுத்த வட்டி விகித முடிவு தான். பெட்ரல் ரிசர்வ் நேற்று வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது.
தங்கத்தில் முதலீடு
இது 2025ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முதல் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே உச்சத்தைத் தொட்ட நிலையில், தங்கத்தில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதிசெய்ய அதனை விற்பனை செய்யத் தொடங்கினர். இதுவே நேற்று விலை சரிவுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த மாற்றம் இன்னும் சில நாட்கள் தொடரும் எனவும், இப்போதைக்கு இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் வாங்குவது சிறந்ததாக இருக்கும் என்கின்றனர்.
சர்வதேச தங்கம்
அதே நேரத்தில் கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலை ஏன் இவ்வளவு உயர்ந்தது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கத்தை வாங்கியுள்ளன. உலக அரசியல் பதற்றங்கள், பாதுகாப்பான முதலீட்டு தேவை, அமெரிக்க டாலரின் பலவீனம் ஆகியவை தங்க விலை சாதனை அளவை தொட காரணமாக அமைந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் தங்கம் 39% உயர்ந்துள்ளது. அதோடு, புகழ்பெற்ற டாய்ச் வங்கி தனது புதிய அறிக்கையில், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் சராசரி விலை 4,000 டாலரை எட்டும் என கணித்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications