today gold price: தாக்குப் பிடிக்க முடியாது.. தாறுமாறாக உயரும் தங்கம் விலை! டிரம்ப் தான் காரணமாம்.. பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வரும் நிலையில் தமிழகத்தின் சென்னையில் மட்டும் கடந்த எட்டு மாதத்தில் சவரனுக்கு 20,440 தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் உச்சபட்சமாக 77 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதத்தில் 61 ஆயிரம், மார்ச் மாதத்தில் 64, ஏப்ரல் மாதத்தில் 74 ஆயிரம், மே மாதத்தில் 68 ஆயிரம், ஜூன் மாதத்தில் 71 ஆயிரம், ஜூலை மாதத்தில் 75 ஆயிரம், ஆகஸ்டில் 76 ஆயிரம், செப்டம்பரில் 77 ஆயிரம் என தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது.

உலகளவில் பொருளாதார நெருக்கடி, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற பல காரணிகள் தங்க விலையை நிர்ணயிக்கின்றன. மேலும், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மக்கள் அதிகம் வாங்கி வைத்திருப்பதும் விலையை உயர்த்துகிறது.

தமிழகத்தில் வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் காரணமாக, தங்க நகைகள் வாங்கும் தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவை உயர்வு, ஏற்கனவே அதிகரித்துள்ள விலையை மேலும் உயர்த்தும் அபாயம் இருப்பதாக நகை வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

Gold Price

தங்கம் விலை

விலை உயர்வு காரணமாக சாதாரண குடும்பங்களுக்கு தங்கம் வாங்குவது கனவாக மாறியுள்ளது. திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. "ஒரு சவரனுக்கே 77 ஆயிரம் ரூபாய் என்றால், சாதாரண மக்கள் தங்கம் வாங்குவது எப்படி சாத்தியம்?" என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தங்கம் விலை உயர்வு

தங்க விலை தொடர்ந்து ஏற்றம் காணும் நிலையில், நகை வியாபாரிகள் வாடிக்கையாளர் வருகை குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். சிலர் தங்கத்திற்குப் பதிலாக வெள்ளி, பிளாட்டினம், வைர நகைகளுக்கு மாறி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தங்கம் மீது இந்தியர்களின் பாரம்பரிய நம்பிக்கை அதிகமாதலால், விலை உயர்ந்தாலும் வாங்குவோர் இருப்பார்கள் என்பதும் வியாபாரிகளின் கருத்தாகும்.

தங்க முதலீடு

சென்னை மட்டுமின்றி, முழு தமிழகத்திலும் தங்க விலை உயர்வு மக்கள் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில மாதங்களில் தங்க விலை 80 ஆயிரத்தைத் தாண்டும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால், தங்கம் வாங்கும் மக்கள் குழப்பத்திலும், விற்பனை செய்யும் வியாபாரிகள் சிக்கலிலும் சிக்கியுள்ளனர் என்று கூறலாம்.

தங்க நகை தேவை

தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. குறிப்பாக சென்னை சந்தையில் மட்டும் கடந்த எட்டு மாதங்களுக்குள் தங்க விலை சவரனுக்கு ரூ.20,440 உயர்ந்துள்ளது என்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜனவரி 2025-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.57,200-க்கு விற்கப்பட்டது. அதன் பின் விலை ஒவ்வொரு மாதமும் ஏற்றத் தாழ்வுகளுடன் மேலேறிக் கொண்டே வந்துள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்

கடந்த 2025 ஜனவரி ஒன்றாம் தேதி ஒரு சவரன் தங்கம் ( 8 கிராம் 22 கேரட்) 57 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி 61,960 ரூபாயாகவும், மார்ச் 4-ம் தேதி 64,80 ரூபாயாகவும், ஏப்ரல் 22ஆம் தேதி 74 ஆயிரத்து 320 ரூபாயாகவும், மே 15ஆம் தேதி 68,880 ரூபாயாகவும் தங்கத்தின் விலை இருந்தது. ஜூன் இரண்டாம் தேதி 71 ஆயிரத்து 600 ரூபாயாகவும், ஜூலை 23ஆம் தேதி 75,140 ரூபாயாகவும், ஆகஸ்ட் 30ஆம் தேதி 76 ஆயிரத்து 960 ஆக இருந்த தங்கத்தின் விலை, செப்டம்பர் ஒன்றாம் தேதியான நேற்று 77 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதனால், ஜனவரி முதல் செப்டம்பர் வரை தங்க விலை சவரனுக்கு ரூ.20,440 உயர்ந்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத சாதனையாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+