படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க! தங்கம் வாங்க தயங்க வேண்டாம்! பாதிக்குப் பாதி லாபம் கிடைக்குமாமே!
சென்னை: அமெரிக்க ஈரான் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருக்கிறது. திடீரென விலை உயர்வதும், திடீரென விடை குறைவதும் என முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது தங்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், வரும் காலத்தில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை பல மடங்கு உயரும் என்பதால் தங்கம் வாங்குவது நல்லது என்றும் சொல்கின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டியது. குறிப்பாக ஜனவரி இறுதியில் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.

ஆனால் அதன்பிறகு விலை சற்று குறைந்து, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ரூ.1.20 லட்சம் என்ற புள்ளியிலேயே ஏறத்தாழ நிலைத்திருக்கிறது தங்கத்தின் விலை. இந்த இடைப்பட்ட காலத்தில் தங்கத்தின் விலை நிலையாக இல்லை என்றே பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை
இந்த நிலையில், உலகின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான டாய்ச் வங்கி (Deutsche Bank) வெளியிட்டுள்ள அறிக்கை புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த அறிக்கையின் படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை தற்போதைய அளவிலிருந்து சுமார் 80 சதவீதம் வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது உள்ள அளவை விட அதிகரித்து, பெரிய அளவிலான உயர்வை எட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வு
இந்த உயர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, பல நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தை சேமித்து வருவதாகும். முன்பு அமெரிக்க டாலரிலேயே அதிகமாக இருப்பு வைத்திருந்த நாடுகள், தற்போது தங்கத்தை அதிகமாக வாங்க தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்க சேமிப்பை அதிகரித்து வருகின்றன. இதனால் சந்தையில் தங்கத்திற்கு தேவையும் அதிகரித்துள்ளது.
தங்க முதலீடு
மேலும், மேற்காசிய நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் போர் சூழ்நிலை காரணமாக, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மக்கள் தேர்வு செய்து வருகின்றனர். பொருளாதார நிச்சயமின்மை அதிகரிக்கும் போது தங்கம் மீது முதலீடு செய்வது ஒரு வழக்கமாக உள்ளது. இதுவும் விலையை உயர்த்தும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பொருளாதார கணிப்பு
இந்த அனைத்து காரணங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், தற்போதைய விலையிலிருந்து சுமார் 80 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டால், ஒரு கிராம் தங்கம் ரூ.25,000 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது. அதாவது, ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சம் என்ற அளவையும் எட்டக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. ஆனால் இது முழுமையான உறுதி செய்யப்பட்ட கணிப்பு அல்ல. வட்டி விகித மாற்றங்கள், உலக பொருளாதார நிலைமை, அரசியல் சூழ்நிலைகள் போன்றவை தங்கம் விலையை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவை. எனவே, முதலீடு செய்வதற்கு முன்பு நிதானமாக ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்பதும் நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications