இன்னும் 2 நாள் தான் டைம்.. சட்டென உயர போகுது தங்கம் விலை! நறுக்கென விளக்கிய ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் பட்ஜெட்டிற்கு பிறகு சரிந்த தங்கம் விலை மீண்டும் மெல்ல அதிகரித்தே வருகிறது. வரும் காலங்களில் இது எப்படி இருக்கப் போகிறது என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வது குறித்தும் இதன் பின்னணியில் இருக்கும் காரணம் குறித்தும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

தங்கம் தான் எப்போதும் நமக்கு ஆபத்தான காலத்தில் கை கொடுப்பதாக இருக்கிறது. நாம் இக்கட்டான சூழலில் சிக்கும் போது தங்கத்திற்கு மட்டுமே உடனடியாக லோன் கிடைக்கும். அதை வைத்து எப்படியாவது சமாளிக்கலாம்.

Anand Srinivasan gold personal finance

மேலும், உலகின் எந்தவொரு பகுதிக்குச் சென்றாலும் தங்கம் வைத்திருந்தால் மிக எளிதாக அதைப் பணமாக மாற்ற முடியும் என்பதும் ஒரு காரணம். இதன் காரணமாகவே பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

தங்கம் விலை: இந்தியாவில் கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் அதன் விலை இந்தியாவில் பட்டென சரிந்தது. இருந்தாலும் அதன் பிறகு தங்கம் விலை மெல்ல அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இதற்கான காரணத்தைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இந்தியாவில் நேற்றைய தினம் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6660க்கு இருந்தது. இந்தியாவில் குறைந்தாலும் வேடிக்கையாக அமெரிக்காவில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு இருக்கிறது. அங்கே 2530 டாலரில் வர்த்தகமாகிறது. எனவே, இந்தியாவிலும் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்.

அமெரிக்காவில் ஒரு பார் தங்கம் என்பது 400 அவுன்ஸ் ஆகும். முதல் முறையாக ஒரு பார் தங்கம் ஒரு மில்லியன் டாலர் (10 லட்சம் டாலர்). இதுதான் அமெரிக்காவில் தலைப்பு செய்தியாக இருந்தது. எனவே, இந்தியாவிலும் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும். இந்தியாவில் ரூ.10 குறைந்துள்ளது. ஒரு வேளை உள்ளூரில் இருந்த தங்கம் அதிகம் சந்தைக்கு வந்திருக்கலாம். அதனால் தங்கம் விலை குறைந்திருக்கலாம். ஆனால், இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கும் என்பதில் சந்தேகமே இல்லை" என்றார்.

"டிராவிட்+ 10 வருடம்.." பணத்தை பல மடங்காக்கும் சூட்சுமமே இதுதான்.. ஆனந்த் சீனிவாசன் தந்த ஈஸி ஐடியா


முக்கியம்:
அதேபோல மற்றொரு வீடியோவில், "அமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவல் ஜாக்சன் ஹோல் மீட்டிங்கில் பேச இருக்கிறார். இந்த ஜாக்சன் ஹோல் மீட்டிங் ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஜாக்சன் ஹோல் மீட்டிங்கில் தான் ரகுராம் ராஜன் 2008 பொருளாதார மந்தநிலையை முன்கூட்டியே கணித்திருந்தார்.

அடுத்து என்ன:
இந்த கூட்டத்தில் பல முக்கிய பொருளாதார வல்லுநர்கள் பேச உள்ளனர். இந்தக் கூட்டம் நாளை வியாழக்கிழமை நடக்க இருக்கிறது. இந்த ஜாக்சன் ஹோல் மீட்டிங்கில் சர்வதேச மோசமான நிலை இல்லை என்று சொன்னார்கள் என்றால் தங்கம் விலை சட்டென அதிகரிக்கத் தொடங்கும்" என்றார். நாளை அமெரிக்காவில் இந்தக் கூட்டம் நடக்கும் நிலையில், அதில் வல்லுநர்கள் சொல்வதை வைத்து தங்கம் விலை உயர வாய்ப்பு இருக்கிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+