உச்சத்தில் தங்கம் விலை, ஆனா இன்னும் முடியல! அடுத்தாண்டு ரூ.10,000க்கு போகும்- ஆனந்த் சீனிவாசன் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தினசரி புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.

தங்கம் விலை கடந்த சில காலமாக புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Gold price might touches Rs 10000 on next year explains Anand Srinivasan

சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6800 என்ற ரேஞ்சில் இருந்து வருகிறது. வரும் காலங்களிலும் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் எதற்காகத் தங்கம் விலை அதிகரிக்கிறது. வரும் காலத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.. இப்படியே அதிகரிக்கும் தங்கம் விலை அதிகபட்சம் எந்தளவுக்குச் செல்லும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், "தங்கம் விலை உலக சந்தையிலும் உச்சத்தைத் தொட்டு வருகிறது. வழக்கமாகத் தங்கம் விலை அதிகரித்தால் அமெரிக்க டாலர் மதிப்பு குறையும். ஆனால், இந்த முறை தங்கம் விலையும் அதிகரிக்கிறது. டாலர் மதிப்பும் கூடுகிறது.

"உலக மார்க்கெட்டில் தங்கம் விலை குறையுது..உள்ளூரில் மட்டுமே எகிறுதே ஏன்.." விளக்கிய ஆனந்த் சீனிவாசன்


காரணங்கள்: அமெரிக்க மத்திய வங்கி இந்தாண்டு 3 முறை வட்டியைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இப்போது இருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால் ஒரு முறை மட்டுமே குறைப்பார்கள் எனத் தெரிகிறது. இன்னும் சிலர் ஒரு முறை கூட குறைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்கிறது.

உலகம் இப்போது இரு பிரிவுகளாகப் பிரிகிறது. சீனா, ரஷ்யா ஒரு பக்கம் இருக்கிறது.. மேற்குலக நாடுகள் எதிர் பக்கம் இருக்கிறது. உக்ரைன் போருக்குக் கூட ஆயுதங்களை அனுப்பி ரஷ்யாவுக்குச் சீனா உதவுகிறது. அதாவது ரஷ்யா, சீனா ஒரு பக்கமும் உக்ரைனை வைத்து மேற்குலக நாடுகள் மற்றொரு பக்கமும் இருக்கிறது.

புவிசார் அரசியல்: இது ஒரு பக்கம் இருக்க நெதன்யாகுவும் எப்படியாவது இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவியில் தொடர வேண்டும் என்பதற்காக ஈரானைத் தாக்கியுள்ளார். அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து இருக்கிறது. மத்திய கிழக்கில் எதாவது பிரச்சினை வந்தாலே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வருமம். அப்படி ஏற்பட்டால் தங்கம் விலையும் எகிறும், அமெரிக்க டாலர் மதிப்பும் அதிகரிக்கும்.

ரூ.10,000: இப்போது இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும் போது தங்கம் விலை அடுத்தாண்டு 10 ஆயிரம் ரூபாய்க்குச் செல்ல 5% வாய்ப்பு இருக்கிறது. முன்பு எனது வாழ்நாளுக்குள் 10 ஆயிரம் செல்லும் என்று கூறியிருந்தேன். பின்னர் அதை 5 ஆண்டுகள் எனக் குறைந்தேன். ஆனால், இப்போது பார்த்தால் அடுத்தாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் செல்லும் எனத் தெரிகிறது. ஆனால், தெளிவாகச் சொல்கிறேன் 5% தான் இதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதில் விஷயம் என்னவென்றால் அமெரிக்கா இன்னும் வட்டி விகிதத்தைக் குறைக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இந்தளவுக்கு அதிகரித்துள்ளது. அவர்கள் அடுத்த 18 மாதத்தில் 7 முறை குறைத்தார்கள் என்றால் தங்கம் விலை அசால்டாக 10 ஆயிரம் ரூபாய்க்குச் செல்லும்.

நிச்சயம்: ஏனென்றால் தற்போது புதினும் சரி, ஜி ஜின்பிங்கும் சரி பதவியில் தொடர்வார்கள் என்றே தெரிகிறது. அப்படி நடந்தால் புவிசார் அரசியல் நார்மல் ஆகாது. எனவே, அடுத்தாண்டிற்குள் தங்கம் ரூ.10,000க்கு செல்ல 5% வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் தங்கம் விலை நிச்சயம் ரூ 10,000க்கு சென்றுவிடும்" என்று சொல்லி ஷாக் கொடுத்துள்ளார்.

புவிசார் அரசியல், அமெரிக்க டாலர் வலுவாவது, அமெரிக்க வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரும் காலத்திலும் தங்கம் விலை அதிகரிக்கும்... அதுவும் இப்போது அதிகரிப்பதைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதே ஆனந்த் சீனிவாசனின் கருத்தாகும்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+