அடித்து நொறுக்கும் தங்கம் விலை.. அடுத்த மாதமே நடக்க போகும் மேஜர் மாற்றம்! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,565க்கு விற்பனையானது. இதற்கிடையே தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம்.. இது வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கப் பத்திரங்கள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு பெரியளவில் குறைந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரித்தே வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிராம் ரூ.200க்கு மேல் உயர்ந்துள்ளது. இதற்கிடையே இதற்கான காரணத்தை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனில், "அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த ரிப்போர்ட் நேற்று வெளியானது. அதாவது 3%இல் இருந்து 2.9%க்கு குறைந்துள்ளது. அனைவரும் 2.5% அல்லது 2.4% வரை செல்லும் என்று நினைத்தார்கள். ஆனால், அந்தளவுக்கு எல்லாம் குறையவில்லை. 2.9%க்கு மட்டும் குறைந்துள்ளது. ஆனால், இது குறைந்ததே செப். மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பிற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாகவே இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. தங்கம் விலை கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரித்து வருகிறது" என்றார். அதாவது அமெரிக்க மத்திய வங்கி வரும் செப். மாதம் வட்டியைக் குறைக்கலாம். அப்படி வட்டி குறைந்தால் தங்கம் விலை சட்டென அதிகரிக்கத் தொடங்கும்.
தங்கப் பத்திரங்கள்: தங்கப் பத்திரங்கள் குறித்து சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்க பத்திரங்கள் மிகப் பெரிய ஒரு தோல்வி திட்டம் எனக் கூறப்பட்டுள்ளது. ரூ.7000 கொடுத்துத் தங்கப் பத்திரங்களை அரசு திரும்ப வாங்குவது மிகப் பெரிய நஷ்டம் என்று கூறப்பட்டுள்ளது. இறக்குமதி வரி குறைப்பால் மதிப்பு 6% குறைந்த பிறகும் கூட வட்டியாகவே 20% போய்விட்டது என்றே நினைக்கிறேன்.
தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கவே அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதாவது மக்கள் தங்கத்திற்குப் பதிலாக இந்த தங்கப் பத்திரங்களை வாங்குவார்கள் என்று அரசு நினைத்தது. இதன் மூலம் தங்க இறக்குமதி குறையும் என நினைத்தார்கள். ஆனால், நடந்ததே வேறு.. அதாவது மக்கள் வங்கியில் போடும் காசை எடுத்துத் தங்கப் பத்திரங்களை வாங்கினார்கள். தங்கத்தைத் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருந்தார்கள்.
அரசுக்கு நன்மை இல்லை: கடந்த ஆண்டு 45 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இந்தியாவுக்குள் வந்துள்ளது. தங்கப் பத்திரங்களால் இறக்குமதி குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, அரசு அதிக வட்டி கொடுத்து கடன் வாங்கும் திட்டம் போலவே இது மாறிவிட்டது. 7% கொடுத்து கடன் வாங்குவதற்குப் பதிலாக 20% கொடுத்து கடன் வாங்குவது போல ஆகிவிட்டது. ஏனென்றால் தங்கம் விலை அந்தளவுக்கு அதிகரித்துவிட்டது. இதனால் அரசுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. எனவே, இனிமேல் தங்கப் பத்திரம் வருமா என்பது சந்தேகம் தான்.
"டிராவிட்+ 10 வருடம்.." பணத்தை பல மடங்காக்கும் சூட்சுமமே இதுதான்.. ஆனந்த் சீனிவாசன் தந்த ஈஸி ஐடியா
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை விலை அதிகமாக இருந்ததால் மட்டும் தங்கம் இறக்குமதி 4% வரை குறைந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் சென்னையில் முறைகேடாகத் தங்கக் கடத்தலில் ஈடுபட்டோரைக் கூட பிடித்தார்கள். இப்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கக் கடத்தல் குறையும். ஆனால், தங்கம் இறக்குமதி செய்வது தொடர்ந்து அதிகரிக்கும். தங்க இறக்குமதி குறைய வேண்டும் என்றால் வங்கிகள் மக்களின் சேமிப்பிற்கு நியாயமான வட்டியைக் கொடுக்க வேண்டும்.
எப்போது குறையும்: பணவீக்கம் 7%ஆக இருந்தால் வங்கிகள் குறைந்தது 9% வட்டி தர வேண்டும். ஆனால், அப்படித் தர வேண்டும் என்றால் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். கடனுக்கான வட்டி அதிகரித்தால் பொருளாதார வளர்ச்சி குறையும் என அரசு நினைப்பதால் இதைச் செய்ய மாட்டேன் என்கிறார்கள். இதுவே, மக்கள் வங்கியில் பணத்தைப் போடுவதற்குப் பதிலாகத் தங்கத்தை வாங்குகிறார்கள்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications