பாய ஆரம்பிக்க போகும் தங்கம்.. "கப்புனு பிடிங்க.." மிஸ் பண்ணிட்ட கஷ்டம்தான்! சொல்வது ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே 5,500 ரூபாய் என்ற அளவிலேயே இருக்கும் நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுநராக வலம் வருபவர் ஆனந்த் சீனிவாசன்.. சேமிப்பைத் தான் முதன்மையாகச் சொல்லி எப்போதும் அதையே வலியுறுத்துவார். இவர் சில சமயங்களில் கூறும் கருத்துகள் இணையத்தில் டிரெண்டாகும்.

குறிப்பாக இவர் வருமானம் 40,000 ரூபாய் இல்லனா கல்யாணமே பண்ணக் கூடாது எனச் சொல்லியிருப்பார். அது இணையத்தில் பயங்கரமாக டிரெண்டாகி இருந்தது. இதனிடையே இவர் தங்கம் குறித்துக் கூறிய கருத்துக்கள பார்க்கலாம்.
தங்கம் முக்கியம்: தங்கம் என்பது மீது எப்போதும் மக்களுக்கு மோகம் இருந்தே வந்துள்ளது. அதிலும் இந்தியர்களுக்குத் தங்கத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கவே செய்கிறது. இதன் காரணமாகவே இன்றும் கூட தங்கத்தைத் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிப்பாகக் கருதுகின்றனர். சிறுக சிறுக தங்கத்தைச் சேர்த்து வைப்பதையே மக்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே நமது டாப் நகைக்கடைகளும் கூட தங்கம் சார்ந்த சேமிப்பு திட்டங்களைக் கொண்டு வருகின்றன.
கொரோனா காலத்தில் அனைவரது வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாகச் சிறு தொழில் செய்வோர், சின்ன பிஸ்னஸ்மேன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அனைவரும் வீடுகளிலேயே முடங்கியதால் இவர்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதுபோன்ற நேரங்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருந்தது தங்கம் தான். சேமிப்பாக இருந்த தங்கத்தை விற்றும் வைத்தும் தான் பலரும் நிலைமையைச் சமாளித்தனர்.
தங்கம் தான் முதல் முதலீடு: இதன் காரணமாகவே தங்கம் தான் முதல் முதலீடு என்று பலரும் கூறி வருகின்றனர். குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். ஆனால், நீண்ட கால நோக்கில் நாம் பார்க்கும் போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. உதாரணத்திற்கு கொரோனாவுக்கு முன்பு 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 3,5000 முதல் ரூ. 4000 என்ற ரேஞ்சில் தான் இருந்தது.
ஆனால், கொரோனாவுக்கு பிறகு அது மளமளவென உயர்ந்தது. அடுத்தாண்டே ஒரு கிராம் 5000ஐ தொட்டது. இப்போது அதையும் தாண்டி 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6000ஐ தாண்டிவிட்டது. அதேபோல ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,500 என்ற ரேஞ்சிலேயே இருந்து வருகிறது. கடந்த சில காலமாகவே கிட்டதட்ட இந்த ரூ.5,500 என்றே இருந்து வருகிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்குவது சரியாக இருக்குமா.. இனியும் குறையுமா.. வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

எப்போது: இது தொடர்பாக அவர் கூறுகையில், "தங்கத்தின் விலை ரொம்ப மேலேயும் செல்லாமல் கீழேயும் இறங்காமல் இருந்து வருகிறது. தங்கம் இதற்கு மேல் கீழ் குறைய வாய்ப்புகள் குறைவு.. அதேபோல அடுத்த சில மாதங்களுக்கு அது மேலேயும் பெரியளவில் ஏறாது. இதே அளவில் தான் இருக்கும். எனவே, தங்கத்தை வாங்க வேண்டும் என யோசிப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு..
அதேநேரம் என்று அமெரிக்க வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்குகிறது.. அப்போது தங்கம் மிக வேகமாக ஏறும். வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்தவுடன் ஈஸியாக 7000 ரூபாய் வரை கூட செல்லும். இருப்பினும், அதற்கு இன்னும் ஓராண்டிற்கு மேல் இருக்கிறது. எனவே, தங்கத்தை வாங்க விரும்புவோர் வாங்க இதுவே சரியான வாய்ப்பு" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications