காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய 312 சவரன் தங்கம் மோசடி! வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிய உற்சவர் சிலைகளை செய்ய பக்தர்கள் வழங்கிய 312 சவரன் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் வழங்கிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகி உள்ளது. பக்தர்களிடமிருந்து பெறப்பட்டு மோசடி செய்யப்பட்ட தங்கத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடியே 12 லட்சம் ஆகும்.
இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்களிடம் நன்கொடையாக பெற்று தங்கம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

11 பேர் மீது வழக்குப்பதிவு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலில் பயன்பாட்டில் உள்ள சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி அம்மன் உற்சவர் சிலைகள் 1,500 ஆண்டுகள் தொன்மையானது. இந்த சிலைகள் கடந்த 2015 ஆம் ஆண்டு சேதமானதால், புதிதாக சிலைகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.
புதிய சிலை செய்ய தங்கம் 5 %, வெள்ளி 1 %, செம்பு 80% என 55 கிலோ எடையில் புதிதாக 2 உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. புதிதாக செய்யப்பட்ட இந்த சிலைகளில் தங்கம் கலக்காமல் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
அதாவது, காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை சிவகாஞ்சி போலீசாரிடம் 2017 ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோயில் அர்ச்சகர்கள் என 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிலையில் தங்கம் பயன்படுத்தவில்லை
இந்த வழக்கின் விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. புதிய உற்சவர் சிலைகளை ஐஐடி நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சிலையில் தங்கம் பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிவகாஞ்சி போலீசார் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதன்படி, சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், போலீசார் ஆவணங்கள் தாக்கல் செய்தனர். இந்த ஆவணத்தின் நகல் காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது.
312 சவரன் தங்கம்
இதில் காவல்துறை தாக்கல் செய்த திருத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் ஐஐடி குறித்த விவரம் உள்ளிட்டவை நீதிமன்றம் வாயிலாக மனுதாரருக்கு கிடைத்தது. இந்த ஆவணங்களின் மூலம், சோமாஸ்கந்தர் ஏலவார் குழலி அம்மன் சிலைகள் செய்ய பக்தர்களிடம் 312½ சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டதும், புதிதாக தயாரித்த உற்சவர் சிலைகளில், துளி கூட தங்கம் இல்லை என்ற விவரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பக்தர்களிடமிருந்து பெறப்பட்டு மோசடி செய்யப்பட்ட தங்கத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடியே 12 லட்சம் ஆகும். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. பக்தர்களிடம் நன்கொடையாக பெற்று தங்கம் மோசடி செய்யப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications