Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் பத்திரம் சேமிப்பு.. அசல் தங்கத்தை விட அதிக லாபம் தரும் அரசின் மாஸ் திட்டம்.. அபார பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் தங்க பத்திரம் சேமிப்பு திட்டம் என்பது, காகித வடிவில் அல்லது டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டு முறையாகும்... இந்த திட்டத்தின் பலன்கள் என்னென்ன? எப்படி இதில் முதலீடு செய்வது? எப்படி விண்ணப்பிப்பது? தேவையான ஆவணங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

தங்க பத்திரம் சேமிப்பு திட்டம் அருமையான பலன்களை தரக்கூடியது.. நீங்கள் நேரடியாக தங்கத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், திருட்டு பயம் அல்லது லாக்கர் வாடகை போன்ற கவலைகள் இதில் கிடையாது.

Gold Bond

தங்க பத்திரம் சேமிப்பு திட்டம்

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வங்கிகள், தபால் நிலையங்கள் அல்லது பங்குச் சந்தை தரகர்களை நீங்கள் அணுகலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது; உண்மையில், நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்பது இதில் உள்ள ஒரு கூடுதல் இனிப்பு தகவலாகும்..

இதனை வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்கு சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம். இதற்கு அடையாள சான்றாக ஆதார் கார்டு அல்லது பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படும்.

இவற்றுடன் உங்கள் வங்கி விவரங்களை இணைக்க ஒரு காசோலை அல்லது பாஸ்புக் ஜெராக்ஸ் தேவைப்படலாம். எல்லாமே உங்கள் பெயரிலேயே இருப்பதால், எதிர்காலத்தில் வாரிசுதாரர்களை நியமிப்பதும் இதில் எளிதான விஷயம்..

அதிக லாபம் - தங்க முதலீடு

ஆனால், தங்கப் பத்திரத் திட்டத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்வது மிகவும் எளிமையான மற்றும் அதிக லாபம் தரக்கூடிய ஒரு வழியாகும்., உங்கள் அக்கவுண்ட்டு உள்ள பேங்க்கின் நெட் பேங்கிங் வசதி அல்லது செல்போன் ஆப் மூலமாக சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம்.

பொதுவாக வங்கியின் இணையதளத்தில் "Investment" அல்லது "e-Services" என்ற பிரிவின் கீழ் "Sovereign Gold Bond" என்ற ஆப்ஷன் இருக்கும்.. அதை தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து தேவையான கிராம்களை குறிப்பிட்டு பணத்தை செலுத்தலாம். இது தவிர, உங்களிடம் டிமேட் கணக்கு இருந்தால் ஜிரோதா அல்லது அப்ஸ்டாக்ஸ் போன்ற செயலிகள் மூலமாகவும் மிக எளிதாக வாங்க முடியும்.

கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி

இதில் அரசு வழங்கும் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடிதான். நீங்கள் 10 கிராம் வாங்கினால் நேரடியாக 500 ரூபாய் மிச்சமாகும். மேலும், ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் காகித வேலைகளோ அல்லது வங்கிக்கு நேரில் செல்லும் அலைச்சலோ இதில் இல்லை.

உங்கள் முதலீடு டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுவதால், பத்திரம் தொலைந்துவிடும் என்ற கவலையும் வேண்டாம்.. முதிர்வு காலம் முடிவடையும் போது, அதற்கான தொகையும் வட்டியும் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும்..,

சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புகளில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.. இருந்தாலும், தங்க பத்திரம் திட்டத்தின் புதிய வெளியீடுகள் குறித்து அரசு சற்று மௌனம் காத்து வருகிறது.

புதிய தங்க பத்திரம் எப்போது

கடந்த சில மாதங்களாகவே புதிய பத்திரங்கள் வெளியிடப்படாதது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், வட்டி வருமானம் மற்றும் வரிச் சலுகை போன்ற அம்சங்களில் எந்தப் பெரிய மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

மொத்தத்தில், நகையாக தங்கம் வாங்குவதை விட இது ஒரு சிறந்த முதலீடு என்று நிபுணர்கள் கருத்து கூறுகிறார்கள், நகையாக வாங்கும்போது சேதாரம், செய்கூலி என 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்த பத்திரத்தில் அசல் தங்கத்தின் விலை உயர்வதுடன் சேர்த்து, ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும்.

அதுமட்டுமல்ல, காலாவதியாகும் வரை நீங்கள் வைத்திருந்தால், அதன் லாபத்திற்கு வரி விலக்கும் உண்டு. எனினும், இது நீண்ட கால முதலீடு என்பதால், அவசரப் பணத்தேவை இருப்பவர்கள் இதை கொஞ்சம் யோசித்து திட்டமிடுவது நல்லது என்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+