விவசாயிகளுக்கு தங்கம் போல வந்த திட்டம்! உடனடி பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதுதான்
சென்னை: விவசாயிகள் பயிர் கடனுக்காக வங்கிகளின் கதவுகளை தட்ட வேண்டிய நிலையை மாற்றும் வகையில், தமிழக அரசு 'உடனடி பயிர்க்கடன் திட்டம்' என்ற புதிய முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தர்மபுரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், விண்ணப்பித்த அதே நாளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உடனடி பயிர்க்கடன் பெற எப்படி விண்னப்பிப்பது? விண்ணப்பிக்கும் வழிமுறைகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. பயிர்க்கடன், உர மானியம், பயிர் காப்பீடு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு முன்னோடி திட்டமாக 'உடனடி பயிர்க்கடன் திட்டத்தை' தமிழக அரசு நேற்று அறிமுகம் செய்தது.

உடனடி பயிர்க்கடன் திட்டம்
தர்மபுரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தர்மபுரியில் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்ட இந்த புதிய திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்திலோ, இணைய வழியிலோ தங்களது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண்ணைக் கொண்டு பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் மிக எளிமையான முறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
உடனடி பயிர்க்கடன் திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும். விவசாய மக்கள் பயிர்க்கடன் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. தற்போது ஒரு வார காலத்திற்குள் அக்கடனைப் பெறும் நடைமுறையே நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நடைமுறையில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, இணையவழியில் பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ, இணைய வழியிலோ தங்களது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை கொண்டு பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் மிக எளிமையான முறை உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, விவசாயிகளின் நில உடைமை தொடர்பான விவரங்கள் வருவாய்த்துறையிடம் இருந்தும் பயிர்சாகுபடி தொடர்பான விவரங்கள் வேளாண் துறையிடம் இருந்தும் இணைய வழியில் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து, சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு இணைய வழியில் அனுப்ப வேண்டும்.
விவசாயிகள் மகிழ்ச்சி
சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் மற்றும் கிளை மேலாளர் தங்கள் கணினி வழியே விவசாயிகள் குறித்த விவரங்களை சரிபார்த்து கடன் தொகையை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பர்.
இத்திட்டம் நடப்பாண்டிலேயே விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கப்படும் என்பதால் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கான இடுபொருட்கள் உள்ளிட்டவற்றை காலதாமதம் இன்றி வாங்க முடியும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications