Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"1000 ரூபாய்".. தமிழக அரசின் அடுத்த அதிரடி.. "கை கொடுக்கும் கைகள்".. அக்ரிமென்ட்டே போட்டாச்சா.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்காகவே, தமிழக அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இதுகுறித்த மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்புதான், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) ஆகும்.. இந்த இயக்கத்திதன் வழிகாட்டுதலின்படிதான், சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன..

குடும்ப தலைவிகளுக்கு அவசர நேரத்தில் கடன் வழங்கி உதவிக்கரம் நீட்டுவதுதான், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகும்.. பெண்களுக்கான சேமிப்பு பெட்டகமாகவும் விளங்கி கொண்டிருக்கிறது..

 Good announcement and bank loan to self help groups in tamil nadu

மகளிர் சுயஉதவிக்குழு: பைனான்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களிடம் பணம் வாங்கும்போது வட்டியின் தொகை அதிகமாகிறது.. ஆனால், சுயஉதவிக் குழுக்களில் அப்படி கிடையாது.. மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து சேமிக்கும் பணத்தை கடனாகக் குழுவில் இருந்து பெறும்போது, வட்டி விகிதம் மிகவும் குறைவாகவும் பயனுள்ளதாகவும் அவர்களுக்கு இருப்பதால், மகளிரிடையே பெரும் வரவேற்பை, மிக குறுகிய காலத்திலேயே பெற்றுவிட்டது.

கடன் உதவிகள்: அதுமட்டுமல்ல, இந்த குழுக்களில் பொருளாதார சுயசார்பிற்கு வலுசேர்க்கும் வகையிலேயே வங்கிக்கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இப்போதும் அப்படி ஒரு வசதிதான் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இப்போது செயல்வடிவம் பெற்று வருகிறது.

சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் இலக்கை அடையவும், சுய உதவிக்குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தந்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அடுத்தக்கட்ட நகர்வுக்கு சென்றுள்ளது..

அந்த வகையில் ஜூன் 20 ஆம் தேதி சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவற்றிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது..

வரவேற்பு: ஏற்கனவே பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை திமுக அரசு அறிவித்துள்ளது.. இதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக செய்து வருகிறது.. இதற்கு நடுவில், சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்க தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது, பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+