"மிஸ் பண்ணிடாதீங்க".. ரேஷன் கடை அரிசியில் வரப்போகுது மாற்றம்.. விரைவில் அறிமுகமாகும் திட்டம்.. வாவ்
தமிழகத்தின் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்..!!
உடலில் வைட்டமின் பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும்போது, தினசரி உணவில் செயற்கை சத்துகளைச் சேர்த்து தந்தால், மக்கள் பயன்பெற முடியும் என்று செயற்கை ஊட்டமேற்றிய உணவில் சமீபகாலமாக முனைப்புக் காட்டி வருகிறது இந்திய அரசு.
இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளவே மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

டஸ்டிங்
இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் சேர்க்கப்பட்ட அரிசிதான் செறிவூட்டப்பட்ட அரிசி. வழக்கமான அரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அவை சேர்க்கப்படும் விதம் பல உள்ளன. அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியை பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கப்படுகிறது. இவை வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இந்த அரிசியின் பைகளில் (+F) என்று எழுதப்பட்டிருக்கும்.

சக்ரபாணி
இத்துடன் Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும். அந்தவகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கடந்த டிசம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது... சமீபத்தில், தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த திட்டம் குறித்து விரிவாகவே கூறியிருந்தார்.

செறியூட்டப்பட்ட அரிசி
''ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், வழக்கமான அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலந்து விற்பனை செய்யப்படும்'' என்று கூறியிருந்தார். அந்தவகையில் அதுகுறித்து மீண்டும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.. தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களையும் தேர்வு செய்து வழங்கிவருகிறது... மார்ச் 2024-க்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு..

பிளாஸ்டிக் அரிசியா
இப்போது செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து பெற்று, பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கியும் வருகிறது. இந்த அரிசி பிளாஸ்டிக் அரிசி கிடையாது.. இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12 சேர்க்கப்பட்டதுதான் செறிவூட்டப்பட்ட அரிசியாகும். முதல் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும் , சத்துணவு திட்டத்திலும் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது... 2ம் கட்டமாக இந்தியாவில் உள்ள சமூக பொருளாதார குறியீடுகளில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன.

ஹோப் ஜானகி
அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. அடுத்ததாக ரேசன் கடைகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 7.5 லட்சம் அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் எஸ் ஜானகி தெரிவித்துள்ளார்..!!
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications