3 ஏக்கர் நிலம்.. பிரதமரின் சூரியசக்தி மின் திட்டம்.. விவசாயிகளுக்கு மின்சார வாரியம் சொன்ன குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஎம் குசும் எனப்படும் பிரதம மந்திரி கிசான் உர்ஜ் சுரக் ஷா ஏவம் உத்தான் மஹாபியான் என்ற திட்டத்தை பற்றி தெரியுமா? விவசாயிகள் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஊக்குவிக்கப்படும் இந்த திட்டத்தினால் பிற பலன்கள் என்னென்ன தெரியுமா? இதை பற்றிதான் தற்போது ஒரு குட்நியூஸ் தமிழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது.. அதுவும் நிலம் கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை பற்றி பார்ப்போம்.

இந்தியாவை பொறுத்தவரை, விவசாய தொழிலில் லாபம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.. எனவேதான், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த மத்திய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Tamilnadu Narendra Modi

அந்தவகையில், உருவாக்கப்பட்டதுதான் சூரியசக்தி மின் திட்டம்.. கடந்த 2019ல், பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மஹாபியன் யோஜனா எனப்படும் பிஎம் குசும (PM KUSUM) திட்டம் கொண்டுவரப்பட்டது..

சூரியசக்தி மின்சாரம்

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறையில் டீசலை நீக்குவதற்கான ஆதாரங்களை வழங்கவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம் மழை இல்லாமல் சாகுபடி பாதிக்கப்பட்டாலும், சூரியசக்தி மின்சாரம் விற்பனை வாயிலாக விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்.

35 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய பம்புகளை சூரிய ஒளி மூலம் பயன்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு இந்த திட்டத்தில் தீவிரம் காட்டியது.. எனவேதான், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் சோலார் நீர் பம்பு செட்களை நிறுவுவதன் மூலம் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது...

மின்சார வாரியம்

விவசாயிகளிடம் கூடுதல் விலையில் மின்சாரம் வாங்குவதற்கு இழப்பீடாக, மத்திய அரசு, கொள்முதல் அடிப்படையிலான ஊக்கத்தொகை என்ற பெயரில், 1 யூனிட்டுக்கு 40 காசு அல்லது 1 மெகாவாட்டுக்கு வருடத்துக்கு 6.60 லட்சம் ரூபாய் வழங்கும் அல்லது இரண்டில் எது குறைவோ, அந்த தொகையை, மின் வாரியத்திற்கு 5 வருடங்களுக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, மத்திய அரசின் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

சூரியசக்தி மின்நிலையம்

பிரதான் மந்திரி குசும் திட்டத்தின் A, C பிரிவின்கீழ், 11 கிலோ வோல்ட், 22 கிலோ வோல்ட் மின் வழித்தடங்களை உடைய துணை மின் நிலையங்களிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ள தரிசு மற்றும் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு இடத்திலும் ஒரு மின் நிலையம், ஒரு மெகா வாட் முதல், 4 மெகா வாட் திறனில் அமைக்கப்பட உள்ளதால், இதற்காக, நிலத்தை குத்தகைக்கு வழங்க விருப்பம் உள்ளவர்களுக்கு, மின்சார வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

மெகாவாட் திறன்

ஒரு மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க வேண்டுமானால் 3 ஏக்கர் நிலம் தேவையாக உள்ளதால், ஒரு மெகா வாட் முதல் 4 மெகா வாட் வரை மின் நிலையம் அமைக்க, தரிசு நிலம், சாகுபடி செய்ய முடியாத நிலங்களை குத்தகைக்கு வழங்கினால், அதற்கு நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனம் குத்தகை தொகையை வழங்குமாம்.

வருமானம் பெருகும்

ஒருவேளை நிலத்தின் உரிமையாளரே மின் நிலையம் அமைக்க விரும்பினாலும் அதற்கு அனுமதி தரப்படும். இந்த மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, ஒரு யூனிட், 3.28 ரூபாய்க்கு வாங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம்,விவசாயிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் கிடைக்கும். மின் வாரியத்திற்கும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+